Aran Sei

ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமில்லை – தினமும் மன உளைச்சலில் இருப்பதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புலம்பல்

ன்றிய அரசிடம் தினமும் கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் தற்போதைக்கு அது முடியாது என்பதால் மிகவும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தனது கவலையை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டிய போராடும் குழுவினர் முதலமைச்சர் ரங்கசாமியை இன்று சந்தித்தனர். அப்போது, அந்த குழுவினர் முன்பாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி “கடந்த ஆட்சியில் உச்சநீதிமன்ற உத்தரவு தெளிவாக சொன்னபிறகு நமக்கு மரியாதையே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. உண்மையான விடுதலை புதுச்சேரிக்கு இன்னும் கிடைக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் யாருக்காவது ஏதாவது செய்து தர வேண்டும் என்றால் முடியவில்லை. தினமும் மன உளைச்சல்தான். இதற்கு ஒரே தீர்வு மாநில அந்தஸ்து மட்டுமே ஆகும்” என்று கூறியுள்ளார்.

புதுச்சேரியில் மதவாத ஆட்சி அமைந்துவிடக் கூடாது: தமிழ்நாட்டைப் போல புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவை – மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளாக மாநில அந்தஸ்து கோரிக்கை வலுத்து வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் ஆளுநரின் ஒப்புதல் பெற்றே முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில்தான் புதுச்சேரிக்கு அந்தஸ்து கோரி போராடும் குழுவினர் முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்து, இந்த கோரிக்கை தொடர்பாக மீண்டும் வலியுறுத்தினர்.

அவர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “ஒன்றிய அரசிடம் தினமும் கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் தற்போதைக்கு அது முடியாது என்பதால் மிகவும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் என்றார். புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. அண்மைக்காலமாக புதுச்சேரியில் ஆளுநரின் அதிகாரம் அளவுக்கு அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

புதுச்சேரி: பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை கண்டித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம்

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு ஆய்வுப்பணிகளை புதுச்சேரியில் அவ்வப்போது மேற்கொண்டு வருவதுடன், பரபரப்பான பேட்டிகளையும் அளித்து வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரியில் முதலமைச்சரே அதிகாரம் இல்லாததால் மன உளைச்சல் என்றும், மக்களுக்கு தன்னால் எதுவும் செய்ய இயலவில்லை என்று வெளிப்படையாக பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Annamalai honey trap technique Exposed | Amar Prasad | Gayathri Raghuram | Trichy Surya siva | Daisy

ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமில்லை – தினமும் மன உளைச்சலில் இருப்பதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புலம்பல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்