Aran Sei

நாடாளுமன்றத்தால் மட்டுமே சட்டங்களை இயற்ற முடியும்: பொது சிவில் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது – ஒன்றிய அரசு

பொது சிவில் சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

பொது சிவில் சட்டத்தை இயற்றக்கோரி பாஜகவை சேர்ந்த அஸ்வினிகுமார் உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

‘உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்பவே பொது சிவில் சட்டம்’ – இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியம் கண்டனம்

அந்த பொதுநல மனு தொடர்பாக ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், குறிப்பிட்ட சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. பொது சிவில் சட்டம் கொள்கை சார்ந்த விவகாரம். இதில் மேற்கொள்ளப்பட வேண்டியவற்றை மக்கள் பிரதிநிதிகள் முடிவு செய்வார்கள். பொது சிவில் சட்டத்தை இயற்றுவதா வேண்டாமா என நாடாளுமன்றமே முடிவு செய்யும். இந்த விவகாரம் தொடர்பாக சட்ட ஆணையம் அளிக்கும் அறிக்கையை ஒன்றிய அரசு பரிசீலித்து, உரியவர்களிடம் ஆலோசனை நடத்தும்.

எனவே, பொது சிவில் சட்டத்தை இயற்றக்கோரிய பொதுநல மனு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரியுள்ளது.

Source : the wire

அம்மாவைப் பாத்தா பாவமா இல்லையா? | நாயென நெனைச்சி நரியை வளர்த்த கொடூரம் | Aransei Roast | ADMK | Amma

நாடாளுமன்றத்தால் மட்டுமே சட்டங்களை இயற்ற முடியும்: பொது சிவில் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது – ஒன்றிய அரசு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்