ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு கையெழுத்து போடாமல் இழுத்தடிக்கும் ஆளுநரைக் கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா என்றும் முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வது சந்தேகத்திற்குரியது என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி விமர்சித்துள்ளது.
முரசொலி பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு இதுவரை உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. மசோதா தொடர்பாக உரிய விளக்கமளித்தும் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கமளிக்க அனுமதி கேட்டும் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்ட முன்வடிவு, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு இயற்றப்பட்டுள்ளதாகவும், வல்லுநர் குழு அறிக்கை மற்றும் ஆராய்ச்சி தரவுகளின் அடிப்படையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆளுநரின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்துள்ள முரசொலி, ஆன்லைன் விளையாட்டுகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படவில்லை என்றும், ஆன்லைன் சூதாட்டங்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டம்: வட மாநிலப் பெண் தற்கொலைக்கு ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும் – வைகோ
ஆளுநரின் சந்தேகங்கள் அனைத்தும் ஏதோ கேட்க வேண்டும், தாமதப்படுத்த வேண்டும் என்ற அளவில்தான் இருக்கிறதே தவிர, உண்மையான கேள்விகளாக இல்லை என்றும் முரசொலி விமர்சித்துள்ளது. ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு கையெழுத்து போடாமல் இழுத்தடிக்கும் ஆளுநரைக் கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா என்றும் முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வது சந்தேகத்திற்குரியதாக பொதுமக்களால் பார்க்கப்படுகிறது என்றும் முரசொலி குறிப்பிட்டுள்ளது.
பாஜகவின் விளை’ஆடு’ மங்காத்தா | நம்ம உசுர கொசுறா கேக்குறாய்ங்களே | Aransei Roast | Annamalaibjp
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.