ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான எந்த விளம்பரத்தையும் ஒளிபரப்பக்கூடாது என ஒன்றிய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏராளம். இன்று வரை அது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. சொந்தப் பணத்தை இழந்தது ஒருபுறம் கடன் வாங்கி பணத்தை இழந்தது மறுபுறம் என மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலைகள் நடக்கின்றன.
ஆன்லைன் சூதாட்டத்தால் பல உயிர்கள் பறிபோகும் நிலையில், இதனை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், வட கொரியா, ஜப்பான், கம்போடியா, கத்தார் ஆகிய நாடுகள் சூதாட்டத்தை தடை செய்துள்ளன.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் நாட்டில் பல்வேறு சிக்கல்களும் பிரச்சினைகளும் எழுந்திருப்பதால் அனைத்து வகை ஊடகங்களுக்கும் ஒன்றிய அரசு ஒரு அறிவுறுத்தலை விடுத்திருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை ஆன்லைன் சூதாட்டம் என்பது ஒரு சட்ட விரோத செயல் எனவும், மேலும் ஆன்லைன் சூதாட்டங்கள் சமூக சிக்கல்களையும், நிதி பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதால் இது தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ கூடாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டங்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள் மற்றும் ஊடகங்கள் இத்தகைய விளம்பரங்களை வெளியிடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்துள்ள நிலையில் ஒன்றிய அரசின் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
Source : indiatoday
Bulldozer இருக்க நீதிமன்றம் எதற்கு? | உ.பி.,-இல் பாஜக வெறியாட்டம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.