சுல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கிய ஓம் கரேஷ்வர் தாகூரின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விசாரணை ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது, ஆகவே இந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்குவது நியாயமான விசாரணைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
2021 ஜூலையில், இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து இணையதளத்தில் ‘ஏலத்தில்’ விட்ட “சுல்லி டீல்ஸ்” என்ற செயலியை உருவாக்கியதாகக் கூறப்படும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த 25 வயதான வெப் டிசைனர் ஓம்கரேஷ்வர் தாகூர் என்பவரை டெல்லி காவல்துறை ஜனவரி 8 அன்று கைது செய்தது.
“பிசிஏ பட்டம் பெற்ற தாகூர் ட்விட்டரில் உள்ள டிரத்மஹாசபாவின் உறுப்பினர் என்றும், அதில் “இஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்ய, ட்ரோல் செய்யக் கூறியதாகவும் அதனால் கிட்ஹப்பில் சுல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கி டிரத்மஹாசபா குழுவின் உள்ள அனைவருக்கும் அதனைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது” என்று தாகூர் கூறியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“புல்லி பாய்” செயலியை உருவாக்கியதில் முக்கிய நபராகக் கருதப்படும் நிராஜ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ‘சுல்லி டீல்ஸ்’ செயலியை உருவாக்கிய ஓம்கரேஷ்வர் தாகூர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிஷ்னோய் மற்றும் தாகூர் ஆகிய இருவரும் இணையத்தில் தொடர்பு கொண்டுள்ளனர் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.