கொரோனா பல்வேறாக உருமாறிக்கொண்டே இருக்கும்; கொரோனாவோடு வாழப்பழகுங்கள் என்று வைரஸ் குறித்து ஆய்வு செய்யும் நிபுனர் ககன்தீப் காங் தெரிவித்திள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. மாறுபாடு அடைந்த ஓமிக்ரான், தென்னாப்பிரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதன்முதலாக கண்டறியப்பட்டது. ஓமிக்ரான் இந்தியாவில் டெல்டா மாறுபாட்டை மாற்றத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை உள்ள மற்ற கொரோனா வகைகளைக் காட்டிலும் ஓமிக்ரான் குறைவான வீரியம் மற்றும் ஆற்றல் கொண்டதாக இருப்பதாக டாக்டர் ககன்தீப் காங் கூறியுள்ளார்.
கொரோனாவைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு அறிவியல் பூர்வமானது இல்லை – உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி தகவல்
இந்நிலையில் அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில், ‘குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று நான் கூறுகிறேன். பொதுவாக கொரோனா வைரஸ் தொற்று, குழந்தைகளுக்குப் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது. மாணவர்கள் பள்ளிக்கும், வகுப்புக்கும் சென்றால் கொரோனா தொற்று ஏற்படும், தீவிரமடையும் என்று எண்ணுவதைவிட, அவர்கள் வகுப்புகளிலும், சக மாணவர்களிடமும் உரையாடும்போதும், பழகும்போதும் அவர்கள் பெறும் பலன்கள்தான் அதிகம்.
குழந்தைகளைப் பொறுத்தவரை சார்ஸ் கோவிட் தொற்று அவர்களுக்கு நல்வாய்ப்பாக தீவிரமாக இருக்கவில்லை. மிக மிக அரிதான சூழல்களில் மட்டுமே அவர்களுக்குப் பெரிதாக பாதிப்பு இருக்கும். ஆரோக்கியமான குழந்தைகளுக்குப் பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி, ஒமைக்ரான் பற்றி ககன்தீப் காங் கூறுகையில், “பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் எந்தத் தடுப்பூசியைச் செலுத்தலாம் என்று அறிந்த கொள்ளக்கூடப் போதுமான தரவுகள் இல்லை.
கொரோனா வைரஸ்களில் உருமாறி வந்துள்ள ஒமைக்ரான் வைரஸ் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது என்று அறிவியல் வல்லுநர்களைப் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மற்ற உருமாற்ற வைரஸ்களைவிட ஒமைக்ரான் வைரஸ் குறைந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மக்கள்தொகை அதிகம், அதிகமானோர் தடுப்பூசி செலுத்திவிட்டார்கள், அதிகமானோர் நோய்த் தொற்றுக்கும் ஆளாகிவிட்டார்கள் என்பதால், பெரிதாக பாதிப்பு ஏற்படுத்தாது. ஆனால், தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லை. டெல்டா வைரஸைப் பற்றி கவலைப்படும் அளவுக்கு ஒமைக்ரான் பற்றி பயப்படத் தேவையில்லை.
உலகில் அடுத்தடுத்து புதிதாக வைரஸ்கள் உருவாகி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், வைரஸ்களோடு மனிதர்கள் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்தபோதிலும் அதைச் சமாளிக்க அரசுகளும், மக்களும் தயாராகவே இருக்கிறார்கள்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல் இப்போது இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம்மிடம் வைரஸை எதிர்க்க ஏராளமான கருவிகள் வந்துவிட்டன; வைரஸைப் பற்றி புரிந்து கொண்டோம். பரிசோதனை, தடுப்பு முயற்சிகள், சிகிச்சை முறைகள், தடுப்பூசிகளை எவ்வாறு பயன்படுத்துவது, தீவிரத்தன்மையுடன் தடுப்பூசி தயாரிப்பது எனப் பல கருவிகளை வைத்துள்ளதால் அச்சப்படத் தேவையில்லை.
அடுத்தடுத்துகூட அலைகள் உருவாகலாம். 4-வது, 5-வது அலை கூட உருவாகலாம். சுவாசக் குழாயைப் பாதிக்கும் வைரஸ்களாக இருக்கும்போது, காலநிலையோடு தொடர்புடையதாக இருக்கும். ஆதலால் குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் மீண்டும் வரலாம். ஆனால், முதல், 2-வது அலைபோல் இருக்கும் என நினைக்கக் கூடாது. வைரஸின் தீவிரத்தை மட்டுமே பார்க்க வேண்டும்” என்று என்று வைரஸ் குறித்து ஆய்வு செய்யும் நிபுனர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார்.
Source: ANI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.