Aran Sei

காஷ்மீரில் வெளிநாட்டு தூதர்கள் ஆய்வு – ஒமர் அப்துல்லா கடும் கண்டனம்

credits : the indian express

காஷ்மீர் வந்துள்ள, 24 வெளிநாட்டு தூதர்களுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு  அரசியலமைப்புச் சட்டத்தின் 370 வது பிரிவு வழங்கியிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. காஷ்மீரின் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைக்காக ஜம்மு – காஷ்மீர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இணையதள சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோரும் பிற அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களும் வீட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டனர். சுமார் ஓராண்டுக்கு மேலாக வீட்டுச்சிறையில் வைக்கப்பட்ட தலைவர்கள் ஒவ்வொருவராக விடுக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் தான் அங்கு, இணைய சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கள நிலவரத்தை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்கள் நேற்றைய முன்தினம் (17-2-21) ஜம்மு-காஷ்மீருக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள நிலையில், காஷ்மீர் அரசியல் தலைவர்கள் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, காஷ்மீரின் முன்னாள் முதல்வர், ஒமர் அப்துல்லா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்“காஷ்மீருக்கு வருகை புரிந்ததற்கு நன்றி. இப்போது தயவுசெய்து உங்கள் நாடுகளில் இருந்து சில உண்மையான சுற்றுலாப் பயணிகளை அனுப்புங்கள்” என ட்வீட் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மனிஷ் திவாரி, ”(காஷ்மீருக்குள்) வெளிநாட்டினர் செல்லலாம் ஆனால் நாடாளுமன்ற கூட்டு குழு உறுப்பினர்களும், எதிர்கட்சி தலைவர்களும் செல்ல முடியாது. இந்த சுற்றுப்பயணம், நகைச்சுவையானது, காயமடைந்தவர்களின் உடலில் உப்பை தேய்ப்பது போன்றது” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜம்மு & காஷ்மீர் தேர்தல் – ” அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்தை, மக்கள் நிராகரித்தனர் “

மூத்த காங்கிரஸ் தலைவரான சைஃபுத்தின் சாஸ், வெளிநாட்டு தூதர்களின் வருகை ”பயனற்ற நடவடிக்கை” என குறிப்பிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் வந்துள்ள வெளிநாட்டு தூதுவர்கள், அரசு ஏற்பாடு செய்துள்ளதன் படி, சில சமூக அமைப்புகள் மற்றும் மாணவர்களை சந்திப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகால், காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தூதுவர்கள் குழுவை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் வெளிநாட்டு தூதர்கள் ஆய்வு – ஒமர் அப்துல்லா கடும் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்