Aran Sei

ராஜஸ்தானில் கோயில் இடிப்பு விவகாரம் – பாஜகவின் ஒப்புதலோடுதான் இடிக்கப்பட்டதாக காங்கிரஸ் தகவல்

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையின் போது புல்டோசர் கொண்டு கோயில் இடிக்கப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கை என்று பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது. பாஜக ஆளும் முனிசிபாலிட்டி வாரியத்தின் ஒப்புதலோடுதான் கோயில் இடிப்பு தொடங்கப்பட்டது என்று சுட்டிக்காட்டி இதற்குப் பதிலடி கொடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி.

ராஜ்கார்  நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் கூறியிருந்தது. வருவாய் பதிவேட்டின்படி, சுமார் 60 அடி சாலை இருந்த நிலையில், தற்போது 25 அடி அகலம் கூட இல்லை. பல ஆண்டுகளாக, ஆக்கிரமிப்புகள் அதிகம் என, பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

‘அரசியலமைப்புச் சட்டத்தைதான் நாம் முதலில் பின்பற்ற வேண்டும்’ -ட்ரெண்டிங்கில் இர்பான் பதான், அமித் மிஸ்ரா ட்வீட் விவகாரம்

இதற்கிடையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜோஹ்ரி லால் மீனா, எஸ்டிஎம் கேசவ் குமார் மீனா மற்றும் தலைமை அதிகாரி பன்வாரி லால் மீனா ஆகியோர் கோவிலை இடிக்க கூட்டுச் சேர்ந்ததாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின. புகார் அளித்தும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவில்லை என காவல்துறையினர்மீதும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜோஹ்ரி லால் மீனாவின் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், கோயில் இடிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் பாஜகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் 34 பேர் உள்ளனர். காங்கிரஸுக்கு 1 கவுன்சிலர் மட்டுமே இருக்கிறது. பாஜக உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை எவ்வாறு இடிக்க முடியும் .  பாஜகவின் ஒப்பதலின் பேரில்தான்  கோயில்இடிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியின் இப்தார் விருந்தில் கலந்துக்கொண்ட பீகார் முதல்வர்: பாஜக கூட்டணியில் அதிகரிக்கிறதா பிளவு?

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி வாரியத்தின் இரண்டாவது கூட்டத்தில் இடிப்பு பணியை மேற்கொள்ள ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் நாகேட் சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.

source: newindianexpress

சீமானை இயக்குவது பார்ப்பனியம் தான்

ராஜஸ்தானில் கோயில் இடிப்பு விவகாரம் – பாஜகவின் ஒப்புதலோடுதான் இடிக்கப்பட்டதாக காங்கிரஸ் தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்