இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) உட்பட ஒவ்வொருவருக்கும் சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவார் கோரிக்கைவிடுத்துள்ளார்.
சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. “ஓபிசி இடஒதுக்கீடு பிரச்சினையை தீர்க்க மகா விகாஸ் அகாடி உறுதிபூண்டுள்ளது. இது மகாராஷ்டிராவில் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் பொருந்தும்” என்று மும்பையில் நடந்த கட்சி கூட்டத்தில் பவார் தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு பெறுவது ஓபிசி சமூகத்தினரின் அரசியலமைப்பு உரிமை என்றும், ஆனால் ஒன்றிய அரசு அவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். “பட்டியலின சாதிகள் மற்றும் பழங்குடி சமூகங்கள் இடஒதுக்கீடு பெற்ற பிறகுதான் அவர்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேறினார்கள். அதே போன்ற உரிமைகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வழங்க வேண்டும். ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்ருக்கான இடஒதுக்கீட்டை பாஜக எதிர்க்கிறது ” என்று கூறியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்திலும் ஒன்றியத்திலும் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. ஓபிசி இடஒதுக்கீட்டிற்கு பாஜகவினர் என்ன செய்தார்கள்? சமூக சீர்திருத்தவாதி ஷாகு மகராஜ், மகாத்மா பூலே, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் போன்றோர் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு நீதி கிடைக்க பாடுபட்டனர். ஷாகு மகராஜ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கியபோது, பலர் அதை எதிர்த்தனர். ஆனால் அவர் அவற்றைக் கேட்கவில்லை. இன்றும் அதே பிரச்சனையை எதிர்கொள்கிறோம்” என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் உதவியுடன் நிதிஷ் ஆட்சி அமைத்தாலும், சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை அவர் இன்னும் கோருகிறார் என்று தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவார் சுட்டிக்காட்டினார்.
Source: Thenewindianexpress
Nenjukku Needhi I கை கொடுத்தா தீட்டு, கை கொடுக்க கூடாது
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.