Aran Sei

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம் – நேரில் ஆஜராக நூபுர் ஷர்மாவுக்கு சம்மன் அனுப்பிய மகாராஷ்டிர காவல்துறை

முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் பேசியது தொடர்பாக, கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக நிர்வாகி நூபுர் ஷர்மாவை ஜூன் 22-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு மகாராஷ்டிர காவல்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ரா காவல்நிலையத்தில் நூபுர் ஷர்மா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாத்தை மதவெறியர்கள் அவமதிக்க இந்திய அரசு அனுமதிக்க கூடாது: தாலிபான்கள் கோரிக்கை

வருகின்ற  ஜூன் 22-ம் தேதி விசாரணை அதிகாரி முன் வாக்குமூலம் கொடுக்க ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளதாக தானே காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை விவரங்களைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் மற்றும் விரைவு அஞ்சல் மூலமாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள பைடோனி காவல்நிலையத்திலும் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை காவல்துறை ஆணையர் சஞ்சய் பாண்டே கூறும்போது, நூபுர் ஷர்மா மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கை தொடர்பாக விளக்கமளிக்க வருகிற திங்கட்கிழமை நேரில் ஆஜராவதற்கு வரவழைக்கப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகா: தலித் பையனை காதலித்ததால் பெண்ணை ஆணவக் கொலை செய்த பெற்றோர்

கடந்த மே 28 அன்று தொலைக்காட்சி செய்தி விவாதத்தின்போது முகமது நபிக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக நூபுர் ஷர்மா மீது மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 295A (மத நம்பிக்கைகளை உள்நோக்கத்துடன் அவமதிப்பது), 153A (குழுக்களுக்கிடையில் பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 505(2) (பொதுக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் அறிக்கைகள்) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது  என்று காவல்துறையினர் கூறியிருந்தனர்.

Source: Thenewindianexpress

கடும் கோபத்தில் அரபு நாடுகள் ! பம்மும் பாஜக ! Nupur Sharma Comment on Prophet Muhammad

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம் – நேரில் ஆஜராக நூபுர் ஷர்மாவுக்கு சம்மன் அனுப்பிய மகாராஷ்டிர காவல்துறை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்