நபிகள் நாயகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தற்கு எதிராக பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை காணவில்லை என்று மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்வதற்கான போதுமான ஆதாரங்கள் மும்பை காவல்துறையிடம் உள்ளன என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 5 நாட்களாக மும்பை காவல்துறையினர் டெல்லியில் தங்கி நுபுர் சர்மாவை தேடி வருகின்றனர்.
அண்மையில் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் (முன்னாள்) தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பல வளைகுடா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் பிறகு அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக பாஜக கட்சி மேலிடம் தெரிவித்தது.
மேலும், பாஜகவின் டெல்லி மாநில ஊடக பிரிவுத் தலைவர் நவீன் ஜிண்டால், நபிகள்குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து, பின்னர் நீக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பின்னர் அவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
உலக நாடுகளின் கண்டனங்களைத் தொடர்ந்து, அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும், எந்த ஒரு மதத்தையோ ஆளுமைகளையோ அவமதிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் பாஜக அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Source : NDTV
பாஜக அலுவலகத்தை அடித்து நொறுக்கிய இளைஞர்கள் Agnipath Scheme
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.