Aran Sei

நுபுர் சர்மாவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – அறிக்கை தாக்கல் செய்ய ஜார்கண்ட் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Credit: The New Indian Express

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் முஹம்மது நபி தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பாஜக பிரமுகருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக உளவுத்துறையிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையையும் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நீதிமன்றம் கூறியுள்ளது.

வன்முறை தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை உத்தரவிடக் கோரி பங்கஜ் யாதவ் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

பிரயாக்ராஜ் வன்முறை: ‘ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்’ – ஜாவேத் முகமதுவின் மகள் சுமையா நேர்காணல்

அந்த மனு தலைமை நீதிபதி ரவி ரஞ்சன் குமார் மற்றும் நீதிபதி சுஜித் நாராயணன் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மற்றும் பாப்புலர் பிரண்ட ஆஃப் இந்தியா அமைப்பின் அரசியல் பிரிவான சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) கட்சி வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தபிறகு விரிவான அறிக்கையை உயர்நீதிமன்றம் கோரியுள்ளது.” என்று மனுதாரரின் வழக்கறிஞர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

முகமது நபிகள் தொடர்பாக பாஜக பிரமுகர்கள் தெரிவித்த கருத்து – கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா

எஸ்டிபிஐ-யின் அறிக்கையில் குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.

”சம்பவத்திற்கு முன்னதாக மாநில அரசுக்கு உளவுத்துறை வழங்கிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், நிலைமையைச் சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது” என்று அவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

ராஜஸ்தான்: நபிகள் நாயகத்தை விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவிலிருந்து வெளியேறிய முனிசிபல் கவுன்சிலர்

ஒரு பொது இடத்தில் 10 ஆயிரம் பேர் எவ்வாறு  கூடினார்கள். சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, காவல்துறையால் சுடப்பட்ட சுற்றுகளின் எண்ணிக்கை ஆகியவை குறித்து விரிவான விளக்கத்தை அரசிடம் நீதிமன்றம் கோரியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர், கண்ணீர் புகை மற்றும் நீர் பிரங்கி போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இருப்பினும் பொது இடத்தில் சுவரொட்டிகள் ஒட்டலாமா வேண்டாமா என்பது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

Source: The New Indian Express

ராணுவ ஆட்சிக்கான அடித்தளம் தான் Agnipath | Dr Kantharaj Interview | Agnipath Indian Army | Agneepath

 

 

 

நுபுர் சர்மாவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – அறிக்கை தாக்கல் செய்ய ஜார்கண்ட் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்