வரதட்சணை வாங்குவதை விட கேவலமானது வேறு எதுவும் இல்லை. ஆணும் ஆணும் திருமணம் செய்து கொண்டால் குழந்தை பிறக்குமா? பிறகு எதற்கு பெண்களிடம் திருமணத்திற்காக வரதட்சணை கேட்கிறீர்கள் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் மே 23 அன்று புதிதாக கட்டப்பட்ட பெண்கள் விடுதியைத் திறந்து வைத்துப் பேசிய பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், “என்னுடைய காலத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் மிகக் குறைந்த மாணவிகளே இருந்தனர். அது மிகவும் மோசமாக இருக்கும். ஒரே ஒரு பெண் மட்டும் தனியாக படிப்பில் சேர்ந்தால், எல்லோரும் அவளை வினோதமாக உற்றுப் பார்ப்பார்கள். ஆனால் இன்று, பல பெண்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை படிக்கிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பெண்களுடைய கோரிக்கையின் பேரில்தான் தனது அரசாங்கம் மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளது. வரதட்சணை முறை மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு எதிரான பிரச்சாரங்களையும் நாங்கள் இப்பொழுது தொடங்கியுள்ளோம் என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்காக வரதட்சணை வாங்குவதை விட கேவலமானது வேறு எதுவும் இல்லை. இங்கு ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால்தான் குழந்தை பிறக்கும். நாம் அனைவரும் நம் அம்மாவிடம் இருந்துதான் இந்த பூமிக்கு வந்துள்ளோம். இங்கு ஒரு ஆணும் ஆணும் திருமணம் செய்து கொண்டால் குழந்தை பிறக்குமா? என்று பீகார் முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மணமகன் தரப்பு வரதட்சணை வாங்கவில்லை என்று எழுத்துப்பூர்வமாகக் கூறினால்தான், நான் அந்த திருமணத்தில் கலந்து கொள்வேன். இதைத்தான் நான் அனைவரிடமும் கூறுகிறேன் என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Source : ndtv
இளவரசு கிட்ட 20 அறை வாங்குனேன் Bigg Boss Suresh Chakravarthy Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.