சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் தீஷா ரவி கைது செய்யப்பட காரணமாக கூறப்பட்ட டூல்கிட் (பொது ஆவணம்) ஆவணத்தில். தேச துரோக குற்றம் சுமத்தும் வகையில் எதுவும் இல்லை என்று, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
“பொதுவெளியில் உள்ள, முதல் டூல்கிட்-ஐ நான் படித்தேன்… அதில் வன்முறையைத் தூண்டும் வகையில் எதுவும் இடம்பெறவில்லை. காவல்துறை வேறு எதுவும் டூல்கிட்-ஐ வைத்துள்ளதா என்று தெரியவில்லை. ஆனால், பொதுவெளியில் இருக்கும் அந்த ஆவணத்தில் அப்படி எதுவும் இல்லை.” என்று தீபக் குப்தா தொலைபேசி வழியாக தெரிவித்ததாக தி இந்து கூறியுள்ளது.
தீஷா ரவி கைது: போலி செய்தியை பரப்பும் பாஜக தொழிற்நுட்ப அணியை கைது செய்யுங்கள் – மம்தா கருத்து
“‘ஒரு காவல்துறை அதிகாரி நேர்காணலில், ஜனவரி 26 ஆம் தேதி ‘நீங்கள் டெல்லிக்கு புறப்படங்கள்’ என்று அவர்கள் கூறினார்கள் என்று அவர் தெரிவித்ததை நான் கேட்டேன். ஆனால் அவர்கள், ‘நாங்கள் விவசாயிகளுடன் வருகிறோம்’ என்று தெரிவித்ததை அவர் கூறாமல் விட்டுவிட்டார். அதிகபட்சமாக, டெல்லியில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை அவர்கள் மீறும் குற்றத்தை தாண்டி இதில் வேறு எதுவும் இல்லை” என்று நீதிபதி தீபக் குப்தா தி இந்து-விடம் தெரிவித்துள்ளார்.
“இளைஞர்களும் செயல்பாட்டாளர்களும், தவறாகவோ அல்லது சரியாகவோ இருக்கலாம். அவர்கள் கூறுவது எனக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதை அவர்கள் கூறுவதை தடுக்க முடியாது. அவர்களை கைது செயவதன் மூலம், நீங்கள் செயல்பாட்டாளராக இருந்தாலோ, இதுபோன்ற போராட்டங்களில் கலந்துகொண்டாலோ உங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்ற செய்தியை அவர்களுக்க தெரிவிக்கிறோம். இதை செய்து அதில் வெற்றி கண்டீர்கள் என்றால், நாம் ஜனநாயகமாக நீடிக்க முடியாது. இந்தியாவை கட்டமைத்தவர்கள் விரும்பிய ஒரு நாடாக இது இருக்க முடியாது.” என்று தீபக் குப்தா தெரிவித்ததாக தி இந்து கூறுகிறது.
“காலிஸ்தான் வாழ்க” என்று முழக்கமிட்ட குற்றச்சாட்டில், தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது தவறு என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டிய தீபக் குப்தா, காவல்துறை அந்த உத்தரவை படிப்பதன் மூலம், தேச துரோகம் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளும் என்று நம்புகிறேன் என தெரிவித்ததாக, அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
“எதிர்ப்பு என்று ஒன்று இல்லாவிட்டால், ஜனநாயகம் இருக்க முடியாது. ஜனநாயகம் என்பதற்கு இரு வேறு கருத்துகள் என்பதே பொருள்… அரசோடு ஒத்துப்போகவில்லை என்பதாலேயே ஒருவரை, தேசப்பற்றில்லாதவர் என்று கூறமுடியாது. நாம் எல்லோரும் இந்த நாட்டை நேசிக்கிறோம். நாம் எல்லோரும் தேசப்பற்றாளர்கள்” என்று தீஷா ரவி கைது குறித்து, உச்சநீதிமன்ற முனனாள் நீதிபதி தீபக் குப்தா தி இந்து-விடம் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.