Aran Sei

காஷ்மீர் பண்டிட்கள் குறித்து படம் எடுத்தால் மட்டும் போதாது; பாதுகாப்பும் வேண்டும் – காஷ்மீரி பண்டிட்கள் கோரிக்கை

Credit: The Wire

காஷ்மீரி பண்டிட்கள் குறித்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்” போன்று படம் எடுத்தால் மட்டும் போதாது, பண்டிட்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று காஷ்மீர் பண்டிட்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2010-11 ஆண்டில் புலம்பெயர்ந்தவர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் எழுத்தராக வேலை கிடைக்கப் பெற்ற ராகுல் பட், மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள சதுரா நகரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பயங்கரவாதிகளால் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

ராகுல் பட் கொல்லப்பட்டதை கண்டித்து புட்காம் மற்றும் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள பண்டிட்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மோடி, அமித் மற்றும் பாஜகவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

‘பாஜக அரசு காஷ்மீர் பண்டிட்டுகளை பாதுகாக்க தவறிவிட்டது’ – காஷ்மிர் பண்டிட்கள் அமைப்புகள் கண்டனம்

இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல் பட்டின் பெயர் தெரிவிக்க விரும்பாத உறவினர், “இந்த கொலைக்குத் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் செயலற்ற தன்மை தான் காரணம். இதனால் அவர்மீது காஷ்மீர் பண்டிட்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் பட்டின் அலுவலகத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள், அவரது பெயரைச் சொல்லி அழைத்துள்ளனர். அதற்கு அவர் பதிலளித்தபோது அவரை சுட்டுக் கொன்றுள்ளனர். பண்டிட்களான எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் பண்டிட்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்த பண்டிட்கள் அமைப்பு

குல் பட், அந்த அலுவலகத்தில் பணிபுரியும்போது பாதுகாப்பு அற்றவராக உணர்ந்தார். இதனால், மாவட்ட தலைமையகத்திற்கு மாற்றக் கோரி அவர் உள்ளூர் நிர்வாகத்திடம் கோரியிருந்தார். பலமுறை கோரிக்கை வைத்தபிறகும், அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டவில்லை” என்று ராகுல் பட்டின் மனைவி மீனாட்சி பட் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 6 தேதி நாடாளுமன்றத்தில் பேசிய ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், 2019 ஆண்டில் இருந்து தற்போது வரை 14 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேர் காஷ்மீர் பண்டிட்கள் என்று கூறியுள்ளார்.

காஷ்மீர் பண்டிட்களுக்கு அறிவிக்கப்பட்ட வீடுகளில் 17% மட்டுமே கட்டப்பட்டுள்ளது – அமித்ஷா ஆய்வுக்குப் பின் உள்துறை அமைச்சகம் தகவல்

1990களில் பண்டிட்களின் மீதான தாக்குதல் அதிகரித்த் போது, காஷ்மீரை விட்டு வெளியேறாத காஷ்மீர் பண்டிட் சங்கர்ஷ் சமிதியின் தலைவர் சஞ்சய் டிக்கூ, “காஷ்மீர் பண்டிட்களை மறுகுடியமர்வு செய்வதற்கான முயற்சிகளை யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் வன்முறை ஓய்ந்துவிட்டதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், கடந்த ஒரு வருடத்தில், தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு அதிகாரிகள், பிரதிநிதிகள் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களுக்குச் சுற்றுலா பயணிகள்போல தால் எரி சுற்றிக் காட்டப்படுகிறது. அவர்கள் தங்கியிருக்கும் 10 நாட்களுக்கு நிலைமை சரியாக இருப்பது போல காட்டப்படுகிறது. செய்தி ஊடகங்களில் காட்டப்படுவது போல நிலைமை சரியாக இல்லை. நிச்சயமாக ஒரு அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்: ஒன்றிய அரசின் விளம்பரத்தினால் பண்டிட்களுக்கு ஆபத்து – முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த சின்ஹா தலைமையிலான குழு கருத்து

370வது சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் இந்திய அரசு எதையும் சாதிக்கவில்லை என்று கூறியுள்ள டிக்கூ, “காஷ்மீரில் தீவிரவாதம் ஒழிக்கப்படவில்லை; 2019 ஆண்டு ஆகஸ்ட் முதல் காஷ்மீர் இளைஞர்களிடம் பிரிவினைவாத மனநிலை அதிகரித்து வருகிறது. பண்டிட்கள் மீண்டும் காஷ்மீர் திரும்புவதற்கான உறுதியான முயற்சிகள் ஒன்றிய அரசிடம் இல்லை. நிலைமை இயல்பாக இருந்தால், பரிதாபமாக வாழ்க்கை நடத்தும் பண்டிதர்களுடன் அவர்கள் பேச வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

”தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம்குறித்து தெரிவித்துள்ள அவர்,  இத்திரைப்படம் அனைத்து இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது. 70 ஆண்டுகளாக இந்தியர்களாக வாழும் இஸ்லாமியர்களை இவ்வாறு சித்தரிக்கும்போது அவர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று யோசித்து பாருங்கள்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பண்டிட்கள் வெளியேற்றப்பட்டபோது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை; வரலாற்றைத் திரித்த ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ – சரத் பவார்

திரைப்படம் எடுப்பதால் பண்டிட்களின வாழ்வில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிட போவதில்லை. மாறாக, திரைப்படம் ஏற்படுத்தும் எதிர்வினை, பண்டிட்களின் பாதுகாப்பு நிலைமைக்கு நிச்சயம் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.” என்று சஞ்சய் டிக்கூ கூறியுள்ளார்.

1990 ஆண்டு டில்லிக்கு இடம்பெயர்ந்தபோது பேருந்து நிலையத்திற்கு டாக்சியில் அழைத்துச் சென்ற மூக்பூல் குறித்து நினைவு கூர்ந்த ரவீந்தர் பண்டிதா,” மக்பூல் என்ற டாக்சி ஓட்டுநர், இரவு பகல் பாராது எண்ணற்ற பண்டிட்களின் குடும்பங்களை அருகில் இருந்த பேருந்து மற்றும் ரயில் நிலையத்திற்கு பாதுகாப்புடனும் அக்கறையுடனும் அழைத்துச் சென்றார். தி காஷ்மீர் ஃபைல்ஸ் பண்டிட்களுக்கு என்ன நடந்தது என்று காட்டுகிறது. ஆனால், சீக்கியர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து அது பேசவில்லை. இஸ்லாமியர்களை பொறுத்தவரை, மக்பூல் போன்ற இஸ்லாமியர்கள் இல்லையென்றால் என் குடும்பத்திற்கு என்ன ஆகியிருக்கும் என்று யாருக்கும் தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.

Source: The Wire

தமிழர்கள் கொல்லப்படும் போது Modi என்ன செஞ்சாரு? Seeman

காஷ்மீர் பண்டிட்கள் குறித்து படம் எடுத்தால் மட்டும் போதாது; பாதுகாப்பும் வேண்டும் – காஷ்மீரி பண்டிட்கள் கோரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்