Aran Sei

‘மகா வீர் சக்ரா விருது அறிவித்ததில் திருப்தி இல்லை’ – வீர மரணமடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் தந்தை கருத்து

னது மகனின் வீர செயல்களுக்காக, மகா வீர் சக்ரா விருது வழங்கப்பட்டிருப்பதில், தனக்கு 100 விழுக்காடு உடன்பாடில்லையென, கர்னல் சந்தோஷ் பாபுவின் தந்தை உபேந்திரா தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம், கிழக்கு லடாக் பகுதியின் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில்  இந்திய, சீன படைகளுக்கு இடையில் நடைபெற்ற மோதலில், கர்னல் சந்தோஷ் பாபு உயிரிழந்தார். தற்போது, கர்னல் சந்தோஷ் பாபுவிற்கு மகா வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கப்பட்டதில், தனக்கு ”100 விழுக்காடு திருப்தியில்லை” என, சந்தோஷ்- பாபுவின் தந்தை உபேந்திரா தெரிவித்துள்ளார்.

திருடப்பட்ட ஃபேஸ்புக் பயனாளர்களின் செல்ஃபோன் எண்கள் – ஒரு எண் சுமார் 1500 ரூபாய்க்கு விற்பனை

“இந்த விருது (மகா வீர் சக்ரா) வழங்கியதில், எனக்கு 100 விழுக்காடு திருப்தியில்லை, என் மகனைக் கவுரவிக்க இன்னும் சிறந்த வழிகள் இருக்கிறது. என்னை பொருத்த வரை சந்தோஷ் பாபு, தனது பணிக்காலத்தில் செய்த வீர தீரச் செயல்களுக்காக நாட்டின் உயரிய ராணுவ விருதான, பரம் வீர் சக்ரா வழங்கியிருக்க வேண்டும்” என உபேந்திரா கூறியுள்ளார்.

தன் மகன் காட்டிய வீரம், பாதுகாப்பு படையில் பணியாற்றும் பலருக்கு உத்வேகம் அளித்திருப்பதாக, உபேந்திரா தெரிவித்துள்ளார்.

“என் மகனும், அவனுடன் பணியாற்றியவர்களும், வெறும் கைகளுடன் சண்டையிட்டனர். அதிக எண்ணிக்கையில் சீன வீரர்களை கொன்றதன் மூலம், சீனாவை விட இந்தியா உயர்வானது மற்றும் வலிமையானது என அவர்கள் நிருபித்திருக்கின்றனர்” என உபேந்திரா கூறியுள்ளார்.

தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவுக்கு பத்மஸ்ரீ விருது – சர்ச்சையும் பின்னணியும்

பணியில் உயிரிழந்த வீரர்களுக்கு, வழங்கப்படும் துறைசார் சலுகைகளைத் தவிர, வேறு எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லையென உபேந்திரா குற்றம்சாட்டியுள்ளார்.

தெலுங்கானா அரசு, சந்தோஷ் பாபுவின் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் பணமும், ஒரு  குடியிருப்பு நிலம் வழங்கியதோடு, அவரது மனைவிக்குக் குரூப் 1 பணி வழங்கியுள்ளது.

Source: PTI

‘மகா வீர் சக்ரா விருது அறிவித்ததில் திருப்தி இல்லை’ – வீர மரணமடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் தந்தை கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்