Aran Sei

மதமாற்ற தடைச் சட்டம் தேவையில்லை – பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கருத்து

ச்சரிக்கையாக இருக்கும் மாநிலத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் தேவையில்லை என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மதமாற்றம் செய்பவர்களின் தூண்டுதலின் பேரில் இந்துக்கள் தங்கள் மதத்தை மாற்றிக்கொள்வதாக அவ்வப்போது பத்திரிகைகளில் செய்திகள் வெளிவருவதை தொடர்ந்து, மதமாற்ற தடைச் தேவையா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை வழக்கு – கண்ணகியின் அண்ணனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு; இருவர் விடுதலை

“அரசாங்கம் இங்கு எப்போதும் விழிப்புடன் உள்ளது. அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு நிம்மதியாக வாழ்கிறார்கள். எனவே மதமாற்ற தடைச் சட்டம் போன்ற சட்டம் தேவையில்லை,” என்று முதலமைச்சர் உறுதியாக கூறியுள்ளார்.

ஜனதாள கட்சித் தலைவரின் இக்கூற்று பாஜகவுக்கு ஒரு வலுவான செய்தியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

வளைகுடா நாடுகளின் அழுத்தத்தால்தான் நுபுர் சர்மா மீது பாஜக நடவடிக்கை எடுத்தது – ஒவைசி குற்றச்சாட்டு

பாஜகவைச் சார்ந்த ஒன்றிய அரசின் அமைச்சர் கிரிராஜ் சிங் போன்றோர்கள் மதமாற்றத் தடைச் சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பாஜகவுக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையே கருத்தியல் பிளவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: ndtv

விஜய்சேதுபதி எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைப்பாரு | Sampath Ram Interview

மதமாற்ற தடைச் சட்டம் தேவையில்லை – பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்