Aran Sei

எந்தவொரு உயிரையும் மதம், ஜாதி என்று பிரித்துப் பார்க்கக் கூடாது – சர்ச்சை பேட்டி குறித்து சாய் பல்லவி விளக்கம்.

ந்த ஒரு உயிரும் மதம், ஜாதி போன்ற வேறுபாட்டிற்காக துன்புறுத்தப்படவோ, பறிக்கப்படவோ கூடாது என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்

ராணா, சாய் பல்லவி நடிப்பில் உருவான ‘விரட்டாப் பர்வம்’ படம் அண்மையில் வெளியானது. இந்த படத்தின் விளம்பர விழாவிற்கு வந்திருந்த சாய் பல்லவி கொடுத்த பேட்டி ஒன்றில் ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் படுகொலை செய்யப்பட்டதை காட்சிப் படுத்தியிருப்பார்கள், அது வன்முறை என்றால், அண்மையில் பசுவை அழைத்துச் சென்ற இஸ்லாமியர்மீது தாக்குதல் நடத்திவிட்டு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூறுகிறார்கள் அதுவும் தவறுதான். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் என்ன வித்தியாசம்’ என்றும் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. சாய் பல்லவிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகள் பகிரப்பட்டது. மத வேறுபாட்டைத் தூண்டும் வகையில் பேசியதாக சில அமைப்புக்கள் அவர்மீது காவல்துறையினரிடம் புகார் அளித்ததுடன், வழக்கும் தொடர்ந்தனர். இதனையடுத்து சாய் பல்லவி மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

மதத்தின் பெயரால் துன்புறுத்தல் கூடாது – திரைக் கலைஞர் சாய் பல்லவி கருத்து

இந்த நிலையில் அந்த பேட்டியில் தான் பேசியது தொடர்பாக விளக்கமளித்து காணொளி ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாய் பல்லவி வெளியிட்டுள்ளார் .

அதில், “ஹலோ,இது தான் முதல்முறை  ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த ,உங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறேன்.

இது தான் முதல்முறை, நான் என் மனதில் இருந்து பேசும்போது, ஒரு முறைக்கு இருமுறை யோசித்து பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், என் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

நான் இதை ஆங்கிலத்தில் பேச விரும்புகிறேன். எனது மனதிலுள்ள எண்ணங்களை பகிர்ந்துகொள்ள, நான் அதிக நேரம் எடுத்துக்கொண்டால், என்னை மன்னித்துவிடுங்கள்.

அசாம்: மதிய உணவுக்கு மாட்டிறைச்சியை எடுத்து சென்ற தலைமை ஆசிரியை – மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்த காவல்துறை

சமீபத்தில்  ஒரு நேர்காணலில், என்னிடம் நீங்கள் இடது சாரியா அல்லது வலது சாரியா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் நடுநிலையானவள் என்று தெளிவாக பதில் அளித்தேன். முதலில் நாம் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும், அதன்பின்னர் தான் எந்த சார்ப்பு உடையவர் என்பது  குறித்து அடையாளப்படுத்தி கொள்ளலாம். எந்த ஒரு சூழலிலும் ஒடுக்கப்பட்டவர்கள் பாதுக்கப்பட வேண்டும்.

நேர்காணலில் எனது கருத்துகளை  குறித்த  பேசும்போது, நான் இரண்டு மேற்கோள்களை பற்றி விவரித்தேன். அவை என்னுள் பெரிய தாகத்தையும் காயத்தையும் ஏற்படுத்தியுள்ளன. முன்று மாதத்திற்கு முன்பு காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பார்த்தபிறகு, அதன் இயக்குனருடன் உரையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது,  மக்களின் அவலநிலை பார்த்து நான் மிகவும் கலங்கினேன் என்று கூறினேன்.

மத்திய பிரதேசம்: மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி 2 பழங்குடிகளைக் கொன்ற பசுக் காவலர்கள் – 9 பேர் கைது

என்னை போன்ற ஒருத்தியால், இது போன்ற ஒரு இனப்படுகொலையை பார்க்கும்போது நான் நானாக இருக்க முடியாது. பல தலைமுறைகளாக மக்கள் இன்னும்  அதன் தாக்கத்திலிருந்து மீளவில்லை. இதை சொல்லகூடிய  அதே நேரத்தில், கோவிட் காலத்தில் நடந்த கும்பல் படுகொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அந்த காணொளிகளை பார்த்தபோது, அவை என்னை உலுக்கின. அவற்றை எளிதாக கடக்க முடியவில்லை.

எவ்விதமான வன்முறையும் தவறு என்பதைச் நான் உறுதியாக நம்புகிறேன். மதங்களின் பெயரில் நடக்கும் வன்முறைகள் ஒரு  பெரிய பாவச் செயல்.  இதை தான் கூற விரும்பினேன் அவ்வளவு தான். ஆனால்  இணையத்தில் பலர் கும்பல் படுகொலைகளை நியாப்படுத்தியிருந்தனர், அது என்னை மிகவும் பாதித்தது.

உத்தரபிரதேசம்: மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக கூறி வலதுசாரிகளால் தாக்கப்பட்ட இஸ்லாமியர்

என்னை பொறுத்தவரை  ஒருவரின்  உயிரை எடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. ஒரு மருத்துவ பட்டதாரி என்ற முறையில்  அனைத்து உயிர்களும் முக்கியம் மற்றும் சமம் என்று கருதுகிறேன்.

மேலும் எதிர்காலத்தில் ஒரு குழந்தை ஆணோ அல்லது பெண்ணோ அதன் அடையாளம்குறித்த எந்த வித அச்சமும் இல்லமால் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி ஒருநாளை நோக்கி நாம் நகரமால் இருக்க நான் பிரார்த்திருக்கிறேன்.

மாட்டிறைச்சி உண்ணாதவர்கள் வசிக்கும் பகுதியில் மாட்டிறைச்சிக்கு தடை – சட்டமியற்றும் அசாம் மாநில அரசு

எனது 14 வருட பள்ளிக்காலத்தில்,  ஒவ்வொரு நாளும் அனைத்து இந்தியர்களும் எனது சகோதர சகோதரிகள். எனது நாட்டை மிகவும் நேசிக்கிறேன். எனது நாட்டின் செழிப்பான மற்றும் மாறுபட்ட பாரம்பரியம் குறித்த நான் பெருமிதம் கொள்கிறேன் என்று முழக்கமிட்டுள்ளேன். குழந்தைகளாக இருந்தபோது, சாதி, மதம், கலாச்சாரம்குறித்த பேதம் இல்லமால் வளர்ந்துள்ளோம். அது என்னுடைய ஆழ்மனதில் பதிந்துள்ளது.

நான் ஒவ்வொரு முறையும் எனது கருத்துகளை பகிரும்போது நடுநிலை தவறாமால் இருந்துயிருக்கிறேன். ஆனால் நான் கூறிய கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டபோது,  எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மேலும் முக்கியமான நபர்கள் மற்றும் இணையதளங்கள்  நேர்காணலை முழுவதுமாக பார்க்கமால் அதன் துணுக்குகளை மற்றும் பகிர்ந்தது எனக்கு வருத்தமளிக்கிறது. அதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மையை யாரும் கவனிக்கவில்லை.

இந்த காணொளி மூலமாக  கடந்த சில நாட்கள் என்னுடன் துணைநின்றவர்களுக்கு, என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏன் என்றால்  நான் மிகவும் தனிமைபடுத்தபட்டதாக உணர்ந்தேன். மேலும்  என்ன முரண்பட்ட கருத்தைப் பகிர்ந்தேன் என்று எனக்கே வியப்பாக இருந்தது.

எனக்காக ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் யார் என்பதை அவர்கள் புரிந்துக் கொண்டுள்ளனர்.  நான் தனியாக இல்லை என்பதை  எனக்கு உணர்த்தியுள்ளனர். இது மனதுக்கு மிகவும் இதமளிக்கிறது. உங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் அன்பு நிறைந்து இருக்க வாழ்த்துகிறேன். நன்றி

உன் அப்பன் வீட்டு சொத்தா? | கோவிலை ஆட்டய போட பாஜக சதி | Maruthaiyan Speech | Chidambaram Temple

 

எந்தவொரு உயிரையும் மதம், ஜாதி என்று பிரித்துப் பார்க்கக் கூடாது – சர்ச்சை பேட்டி குறித்து சாய் பல்லவி விளக்கம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்