Aran Sei

ரோஹிங்கியா அகதிகளுக்கு வீடு ஒதுக்கும் திட்டம் இல்லை – ஒன்றிய உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்

டெல்லியில் வசித்து வரும் ரோஹிங்கியா அகதிகளுக்கு வீடு ஒதுக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று ஒன்றிய அரசின்  உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

2021 ஆம் ஆண்டு ரோஹிங்கியா அகதிகளுக்கான இடைத்தை வேறு இடத்துக்கு மாற்றுமாறு ஒன்றிய அரசுக்கு டெல்லி அரசாங்கம் கடிதம் எழுதியது.

நாட்டில் தஞ்சம் புகுந்தவர்களை இந்தியா எப்போதும் வரவேற்கிறது. அனைத்து ரோஹிங்கியா அகதிகளும் கிழக்கு டெல்லியின் பக்கர்வாலா பகுதியில் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான (EWS) குடியிருப்புகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று\ ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ட்வீட் செய்துள்ளார்.

திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கம் – கருத்துரிமையை முடக்குவதாக பாஜக மீது குற்றச்சாட்டு

இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் இதனை மறுத்துள்ளது. டெல்லியில் சட்டவிரோதமாக வசித்து வரும் ரோஹிங்கியா அகதிகளுக்கு டெல்லி பக்கர்வாலா பகுதியில் குடியிருப்புகள் ஒதுக்கப்படுவதற்கான உத்தரவு எதையும் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் பிறப்பிக்கவில்லை என அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹிங்கியாக்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான திட்டத்தை டெல்லி அரசு பரிந்துரைத்ததாகத் தெரிவித்துள்ள ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம்,  அவர்கள் தற்போது இருக்கும் அதே இடத்தில் தொடர்ந்து இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் – தமிழ்க் குறவன் திருமாவளவன்

ரோஹிங்கியாக்களை தங்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அதுவரை அவர்களை தடுப்பு முகாமில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. மேலும், அவர்கள் தற்போது வசிக்கும் பகுதியை தடுப்பு முகாமாக உடனடியாக அறிவிக்குமாறும் டெல்லி அரசுக்கு ஒன்றிய அரசின்  உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இலவசம் தொடர்பான வழக்கு: கார்ப்பரேட்டுகளுக்கு ஒன்றிய அரசின் வரிச்சலுகை இலவசம் இல்லையா? – உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசாங்கம் தனது சுயநல அரசியலுக்காக சட்டவிரோத ரோஹிங்கியா இஸ்லாமியர்களை குடியேற்ற முயற்சிப்பதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது.

Source: timesnownews.

இனிதான் ஆட்டம் சூடு பிடிக்கும் – ஸ்டாலின் திருமா மாஸ் கூட்டணி | Sanga Tamizhan Interview | VCK

ரோஹிங்கியா அகதிகளுக்கு வீடு ஒதுக்கும் திட்டம் இல்லை – ஒன்றிய உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்