ராமர் பாலம் குறித்து மக்களை தவறாக வழிநடத்திய மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் வலியுறுத்தியுள்ளார்.
ராமர் பாலம் இருந்ததற்கான உறுதியான ஆதாரம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசின் அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியிருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு பதிலளித்த சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், “ராமர் பாலத்துக்கு ஆதாரம் இல்லை என்று காங்கிரஸ் ஆட்சியின்போது கூறியதற்கு எங்களை ‘ராமருக்கு எதிரி’ என்று பாஜக கூறியது. தற்போது, ராமரின் பக்தர்கள் என்று கூறிக்கொள்பவர்களின் அரசு, அதே கருத்தை தெரிவித்துள்ளது. அவர்களை என்ன என்று சொல்வது?
ராமர் பாலம் இருந்தது என்பதற்கான துல்லியமான ஆதாரங்கள் எதுவும் இல்லை – ஒன்றிய அரசு தகவல்
ராமர் பாலம் குறித்து மக்களை தவறாக வழிநடத்திய மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். இது குறித்து ஆர்எஸ்எஸ் எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளது. அவர்கள் ராமரின் உண்மையான பக்தர்களாக இருந்தால், அரசை விமர்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Source : NDTV
அ.மலைக்கு டைம் சரியில்ல |அமர்பிரசாத் கிண்டுற களி |கம்பி எண்ணப்போகும் அண்ணாமலை |
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.