Aran Sei

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ சோதனை – சுமார் 100 பேர் கைது

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் உள்ளவர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குறித்த தமிழக ஆளுநரின் கருத்து: ‘ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போல ஆளுநர் செயல்படக் கூடாது’ – வைகோ கண்டனம்

இந்த சோதனையின் ஒரு பகுதியாகக் கடலூரில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் அமைப்பின் மாவட்டத் தலைவர் பியாஸ் அகமதுவை பிடித்து சென்றுள்ளனர். தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே முத்துத் தேவன் பட்டியில் செயல்படும் அறிவகம் என்ற மதரஸாவில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.‌ இதே போன்று கம்பம் பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பைச் சேர்ந்த யாசர் என்பவரது வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இதனிடையே முத்து தேவன் பட்டி அறிவகம் மதரஸாவில் நடக்கும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாம் அமைப்பினர் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புரசைவாக்கத்தில் உள்ள மாநிலத் தலைமை அலுவலகம் மூக்காத்தால் தெருவில் உள்ளது. மூன்றாவது தளத்தில் உள்ள அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த அலுவலகத்தில் அவர்களது நிர்வாகிகளும் உள்ளனர். அவர்களிடம் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டல தலைவர் பக்கரி அகமது தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா குறித்த தமிழக ஆளுநரின் கருத்து: ஆர்.எஸ்.எஸின் திட்டத்தை செயல்படுத்துவதாக திருமாளவன் குற்றச்சாட்டு

மேலும் சிஆர்பிஎப் வீரர்களும் 20-க்கும் மேற்பட்டவர்களும் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். தொடர்ந்து ஒலி பெருக்கி மூலம் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வருவதால் வேப்பேரி உதவி ஆணையர் அரிகுமார் தலைமையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சோதனை நடக்கும் நிலையில் 100 பேர் வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

“எதிர்ப்புக் குரல்களை அடக்க ஏஜென்சிகளைப் பயன்படுத்தும் பாசிச ஆட்சியின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறோம் என்று பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

Source : vikadan

Nakkeeran Prakash attacked by Kallakurichi Sakthi School Goondas | Dhamondra Prakash

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ சோதனை – சுமார் 100 பேர் கைது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்