அசாம் மாநிலத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினரும்,சமுகசெயல்பாட்டாளருமான அகில் கோகோயை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததற்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) கவுஹத்தி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனுவை நேற்றைய தினம் தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த மனுவை இன்னும் நீதிமன்றம் விசாரனைக்கு எடுத்துகொள்ளவில்லை என்றும் அந்த செய்தி கூறுகிறது.
கடந்தாண்டு டிசம்பர் 2019 லிருந்து ஏறத்தாழ 18 மாதங்களுக்கு மேலாக சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த கலவரம் தொடர்பாக என்.ஐ.ஏ அவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருந்தது.
இந்நிலையில், கடந்த ஜூலை 1 அன்று என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் அவர் மீதான வழக்குகளை நீக்கி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தற்போது அந்த உத்தரவுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை மேல்முறையீடு செய்துள்ளதாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.