Aran Sei

தொழிற்சங்க செயல்பாட்டார் தாக்கப்பட்ட புகார் – காவல்துறை விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தொழிற்சங்க செயல்பாட்டாளர் ஷிவ் குமாரை, சட்டவிரோதமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, ஹரியானா மாநில காவல்துறைக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை, சோனிபட் காவல்துறை கண்காணிப்பாளர் நான்கு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என்றும், இந்த வழக்கில் உள்ள புகாரின் நகலை, மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பவேண்டும் என்றும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூறியிருப்பதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் மூடப்படும் 10113 நிறுவனங்கள் – கொரோனா தொற்று எதிரொலி

ஷிவ் குமார் கடத்தப்பட்டு, சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டார் அல்லது ஒருதலைப்பட்சமாக கைது செய்யப்பட்டார் மற்றும் காவலில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தி இந்து கூறுகிறது.

தொழிலாளர்களுக்கு வழங்கப்படாத ஊதியத்தை வழங்கக் கோரி, ஜனவரி 12 ஆம் தேதி, குண்ட்லியில் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், ஷிவ் குமார் மற்றும் மற்றொரு தொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கௌர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவருககும் சமீபத்தில் ஜாமீனில் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவரும், காவல்துறை தங்களை தாக்கியதாக புகார் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சங்க செயல்பாட்டார் தாக்கப்பட்ட புகார் – காவல்துறை விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்