Aran Sei

‘கலைந்து செல்லுங்கள்’ காவல்துறையின் எச்சரிக்கை – ‘பயமில்லை. எங்களுடன் மக்கள் இருக்கிறார்கள்’ விவசாயிகள் பதிலடி

டெல்லி திக்ரி எல்லையில், விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் இடத்தில் ‘சட்டரீதியிலான எச்சரிக்கை’ என்ற தலைப்பிட்டு, எச்சரிக்கை பதாகைகளை டெல்லி காவல்துறையினர் வைத்துள்ளனர்.

அதில், “நீங்கள் கூடியிருப்பது சட்டவிரோதமானது. கலைந்து செல்லுமாறு நீங்கள் எச்சரிக்கப்படுகிறீர்கள். இல்லையென்றால், உங்களுக்கு எதிராக சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்று இந்தி மற்றும் பஞ்சாப் மொழியில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

‘நாடாளுமன்ற முற்றுகை; 40 லட்சம் டிராக்டர்கள்; இந்தியா கேட் பூங்காவில் உழவு’ : தீவிரமாக களமிறங்கும் விவசாயிகள்

குடியரசு தின டிராக்டர் பேரணி வன்முறைக்குப் பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறும் கூடுதல் காவல்துறை இணை ஆணையர் சுதான்ஷு தமா, “நாங்கள் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராடும் விவசாயிகள் மீண்டும் சட்டத்தை மீறுவது சட்டவிரோதமானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, பாரதிய கிசான் சங்கத்தின் துணைத் தலைவர் ஷிங்காரா சிங் மான், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறும்போது, “இந்த அறிவிப்பு பதாகையை திக்ரி எல்லையில் டெல்லி காவல்துறையினர் முகாமுக்கு அருகே மாலை 5 மணியளவில் பார்த்தேன். இது தேசிய நெடுஞ்சாலையின் தூணில் மாட்டப்பட்டிருந்தது. இதே போன்று மற்ற இடங்களிலும் இருக்கலாம். எனினும், இவற்றுக்காக நாங்கள் கவலைப்படவில்லை.  விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை எங்கள் போராட்டங்கள் தொடரும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி மோடிக்கு தினமும் 1 லட்சம் மெசேஜ்கள் – உத்தர பிரதேச விவசாய தலைவர்

மேலும் “விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ‘கூட்டம் கூட்டுவது விவசாய சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்காது’ என்று கூறியதை தொடர்ந்து, இந்த எச்சரிக்கை பதாகை மாட்டப்பட்டுள்ளது. உண்மையிலேயே இந்த பேச்சு எனக்கு ஆச்சரியமளிக்கிறது. அவர் இந்த கூட்டத்தினருடன் 11 கட்ட பேச்சுவார்த்தைகளை  நடத்தினார். மேலும், போராட்டத்தை அமைதியாகவும், அரசியல்சார்பற்று நடத்துவதற்காகவும் எங்களை பாராட்டினார். எங்கள் கூட்டங்களின் போது பேசியபோது கூட அவர், எங்களை ‘கிசான் அந்தோலன்’ (விவசாய போராளிகள்) என்று அழைத்தார். ஆனால், இப்போது மட்டும் நாங்கள் வெறும் கூட்டமாக தெரிகிறோம்.” என்று ஷிங்காரா சிங் மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிராந்திகாரி கிசான் சங்கத்ன் தலைவரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் உறுப்பினருமான டாக்டர் தஷன் பால், இந்த எச்சிரிக்கை பதாகையை பற்றி கூறும்போது, “இதுபோன்ற நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கிறோம். டெல்லி எல்லைகளில் 90 நாட்களாக விவசாயிகள் அமைதியான முறையில்தான் போராட்டம் நடத்தி வருகின்றனர். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் போராட்டத்தை தொடருவோம். இத்தனைக்கும் நாங்கள் டெல்லி நகருக்குள் சென்று அமரவில்லை. எல்லைகளில்தான் போராடுகிறோம்.” என்று சுட்டிக்காட்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிஸின் செய்தி தெரிவித்துள்ளது.

விவசாயிகள் போராட்டம் – விவசாய சங்க தலைவர் மீது துப்பாக்கிச் சூடு, கொலை முயற்சி

“அவர்கள் (காவல்துறையினர்) ஏற்கனவே காசிப்பூரில் இதை முயன்றார்கள். ஆனால் அங்கு தோல்வியடைந்தார்கள். ஒரேயொரு விவசாயி மட்டும் இந்த போராட்டத்தில் உட்கார்ந்திருந்தாலும், அவர்கள் (காவல்துறையினர்) எதையும் செய்ய முயல்வார்கள் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. காவல்துறையினர் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்று சமிக்ஞை தெரிந்தால் கூட, எங்களுடன் இணைந்து அதை எதிர்கொள்ள ஏராளமான மக்கள் இங்கே குவிவார்கள்.” என்று அனில் மாலிக் என்ற விவசாயி கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றும் (பிப்ரவரி 23), டெல்லி திக்ரி எல்லையில், காவல்துறையின் தீவிர கண்காணிப்பு கெடுபிடிகளுக்கிடையில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் வழக்கம் போல் தொடர்ந்துள்ளனர்.

‘கலைந்து செல்லுங்கள்’ காவல்துறையின் எச்சரிக்கை – ‘பயமில்லை. எங்களுடன் மக்கள் இருக்கிறார்கள்’ விவசாயிகள் பதிலடி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்