Aran Sei

பிரதமரின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பான வழக்கை புதிய குழு விசாரிக்கும் – உச்சநீதிமன்றம்

credits : the indian express
னவரி 5 அன்று விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தினால் பஞ்சாப் மாநிலத்தின் ஹுசைனிவாலாவிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கார் சுமார் 20 நிமிடங்கள் வரை சிக்கிக்கொண்டது. இதனால் ஏற்பட்ட “பாதுகாப்புக் குறைபாடு” சம்பந்தமாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
பிரதமரின் பஞ்சாப் வருகையின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரிக்க ஒன்றிய அரசும், பஞ்சாப் அரசும் தனித்தனியாகக் குழுக்களை அமைத்துள்ளன. இந்த 2 குழுக்களும் தங்களது விசாரணையை தற்போதைக்கு மேற்கொள்ள வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் முன்னரே தெரிவித்துள்ளது.
பிரதமரின் பஞ்சாப் பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவல்களை வாங்கி பாதுகாக்குமாறு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
பிரதமரின் பாதுகாப்பு பிரச்சினைக்குப் பஞ்சாப் அரசு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும் , ஜனவரி 5 ஆம் தேதி நடந்த பாதுகாப்பு மீறல்கள் குறித்து முழுமையான மற்றும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பஞ்சாப் தலைமை வழக்கறிஞர் பட்வாலியா கூறியுள்ளார்.
ஆனால் பிரதமரின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாகப் பஞ்சாபின் காவல்துறை அதிகாரிகளை முதன்மைக் குற்றவாளியாக ஒன்றிய அரசு கருதுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டிற்ற்க்கு எந்த ஆதாரமும் இல்லை என்று பட்வாலியா தெரிவித்துள்ளார்.
Source : The Hindu
பிரதமரின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பான வழக்கை புதிய குழு விசாரிக்கும் – உச்சநீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்