Aran Sei

ஜேஎன்யு முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் பிணை மனு – தினசரி விசாரணைக்கு ஏற்ற டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லியில் உள்ள  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் பிணை கோரி அண்மையில் தாக்கல் செய்த மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் தாக்கல் செய்த பிணை மனுவை வரும் 23-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

கோடை விடுமுறை தொடங்கும் முன் விசாரணையை முடிக்க உமர் காலித் தாக்கல் செய்த பிணை மனு மீது தினசரி அடிப்படையில் விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

#Sadhguru_not_welcome – இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என ஓமனில் ஜக்கி வாசுதேவுக்கு எதிர்ப்பு

நீதிபதிகள் சித்தார்த் மிருதுல், ரஜ்னிஷ் பட்நாகர் ஆகியோர் அடங்கிய அமர்வு பிணை மனு மீதான வாதங்களை சிறப்பு அமர்வாக மே 23, 2022 முதல் தினசரி அடிப்படையில் விசாரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் முக்தா குப்தா, மினி புஷ்கர்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வியாழனன்று (மே 19) இந்த வழக்கை நீதிபதி மிருதுல் தலைமையிலான அமர்வுக்குப் பட்டியலிட உத்தரவிட்டது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, ​​அமராவதியில் பிரதமர் மோடியைக் குறிப்பிட்டு ஆற்றிய உரையின் சில பகுதிகளுக்கு நீதிபதிகள் அமர்வு ஆட்சேபம் தெரிவித்தது. இது போன்ற வார்த்தைகளை பிரதமருக்குப் பயன்படுத்தலாமா என்று நீதிபதி பட்நாகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊராட்சி மன்றத்தின் அதிகாரத்தைப் பறிக்கும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திருத்தம் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

இதற்குப் பதிலளித்த மூத்த வழக்கறிஞர், நாட்டின் யதார்த்தம் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் யதார்த்தத்தில் மறைக்கப்பட்டிருப்பதைக் காட்டவே அந்த வார்த்தைகள் உருவகமாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்த நீதிபதி பட்நாகர், “பிரதமருக்கு வேறு சில வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

அமராவதி உரையில் ‘இன்குலாப்’ மற்றும் ‘கிராந்திகாரி’ என்ற வார்த்தைகளை உமர் காலித் பயன்படுத்தியதன் அர்த்தம் என்ன என்றும் பெஞ்ச் கேட்டது. பைஸ் இந்த வார்த்தைகளின் அர்த்தம் குறித்து நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி மிருதுல், “நீங்கள் இன்குலாப் மற்றும் கிராந்திகாரி என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளீர்கள். அதன் அர்த்தம் என்னவென்று எங்கள் அனைவருக்கும் தெரியும். நீங்கள் இன்குலாப் ஜிந்தாபாத் என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளீர்கள். அதைத்தான் நாங்கள் உங்களிடம் கேட்டோம்” என்றார்.

கியான்வாபி மசூதியும் சர்ச்சைக்கான பின்னணியும் – ஒரு விரிவான அலசல்

வரலாற்றாசிரியர் ஒருவரைக் குறிப்பிட்டு, இன்குலாப் என்ற வார்த்தைக்குப் புரட்சி என்று பொருள், அதே சமயம் இன்குலாப் ஜிந்தாபாத் என்ற வார்த்தைக்குப் புரட்சி வாழ்க என்று பொருள்” என்று மூத்த வழக்கறிஞர் பாயிஸ் பதிலளித்துள்ளார்.

முந்தைய விசாரணையின்போது, ​​நீதிபதி மிருதுல், அமராவதியில் உமர் காலித் பேசிய பேச்சு அருவருப்பானது என்றும், அரசாங்கத்தை விமர்சிப்பது அனுமதிக்கப்படுகிறது, ஆனால் ஒரு ‘லக்ஷ்மண ரேகையத்’ தாண்டக் கூடாது என்றும் கூறியிருந்தார்.

Source: ndtv

அண்ணாமலைக்கு பேசுற தகுதியே கிடையாது Vanchi Nathan Interview

ஜேஎன்யு முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் பிணை மனு – தினசரி விசாரணைக்கு ஏற்ற டெல்லி உயர்நீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்