Aran Sei

டெல்லி: மக்களின் எதிர்ப்புக்ளையும் மீறி வீடுகளை இடித்த பாஜக ஆளும் நகராட்சி நிர்வாகம்

டெல்லியில் உள்ள பாஜக ஆளும் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிரப்புகளை அகற்றுவதாகக் கூறி தென்கிழக்கு டெல்லியில் உள்ள மதன்பூர் கதாரில் 6 மாடி கட்டடத்தை நகராட்சியினர் இடித்துள்ளனர்.

தங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என்று கூறி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கட்டடம் இடிக்கப்பட்டது. சுத்தியல்களுடன் ஆயுதம் ஏந்திய பல தொழிலாளர்கள் கட்டிடத்தின் உள்ளே இருந்து உடைப்பதையும் காண முடிந்தது.

ஷாஹீன் பாக் பகுதியிலும் கட்டடத்தை இடித்தார்கள். இங்கேயும் இடிக்கிறார்கள். இந்தக் கட்டடங்கள் சட்டவிரோதமானவை அல்ல என்று ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அமானதுல்லா கான் தெரிவித்துள்ளார்.

“ஏழைகளின் வீடுகளைக் காப்பாற்றினால் சிறைக்குச் செல்லவும் நான் தயார். இங்கு ஆக்கிரமிப்பு எதுவும் இல்லை. ஆக்கிரமிப்பு ஏதேனும் இருந்தால் இடிப்பதில் அவர்களுக்கு (நகராட்சி அமைப்பு) ஆதரவளிப்பேன்” என்று அவர் ஏஎன்ஐயிடம் கூறியுள்ளார்.

ஹரியானா:ஆர்எஸ்எஸ் சுதந்திரத்திற்கு போராடியது எனக்கூறும் 9-ம் வகுப்பு பாடநூல் – வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜகவின் முயற்சியென காங்கிரஸ் கண்டனம்

கட்டடம் கட்டுபவர்களிடம் லஞ்சம் வாங்கிய பிறகு அனுமதித்துவிட்டு இப்போது எந்த அறிவிப்பும் வழங்காமல் புல்டோசர்களைக் கொண்டு வீடுகள் இடிக்கப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

காவல்துறையினருக்கு எதிராக முழக்கங்களை மக்கள் எழுப்பியுள்ளனர். போராட்டம் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் தத் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெறுப்பின் புல்டோசரை” தேசிய தலைநகரில் இயக்க காங்கிரஸ் அனுமதிக்காது. வசதி படைத்தவர்களின் பண்ணை வீடுகள்மீது இது போன்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி புறக்கணிப்பு – தமுஎகச கண்டனம்

பாரதிய ஜனதா கட்சி புல்டோசர்களை கொண்டு இடிக்க விரும்பினால், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தின் மீது புல்டோசர்களை ஏற்றி இடிக்க வேண்டும்; இந்திய எல்லைகளில் சீனாவின் அத்துமீறல்கள்மீது புல்டோசர்களை ஏற்ற வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் தத் தெரிவித்துள்ளார்.

Source:ndtv

Shawarma Ban ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது Dr Kantharaj Interview | Shawarma Ban

டெல்லி: மக்களின் எதிர்ப்புக்ளையும் மீறி வீடுகளை இடித்த பாஜக ஆளும் நகராட்சி நிர்வாகம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்