டெல்லியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணிகளுக்கு எதிராக மதன்பூர் காதர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினரான அமானத்துல்லா கானை டெல்லி காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
பாஜக ஏழை மக்களின் வீடுகளை புல்டோசர்களை கொண்டு இடிக்கிறது. “பாஜகவின் “புல்டோசர் முறையை” எதிர்க்கும் மக்களின் மீது காவல்துறையினர் தடியடி நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது. பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள், இதற்காக எத்தனை முறை சிறைக்குச் சென்றாலும் மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன்” என்று அமானத்துல்லா கான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேற்கு டெல்லியின் பல பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தெற்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் புல்டோசர்களை பயன்படுத்தியது. இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் புல்டோசர்களை தடுப்பதற்காக சாலைகளில் அமர்ந்து போராட்டத்தை நடத்தினர்.
இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததாகவும், பாதுகாப்புப் படையினர் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், இதனையடுத்து அமானத்துல்லா கானுடன் மேலும் 5 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Source : the hindu
பிரியாணி தடை திமுக ஆட்சியை முடக்கும் சதி | Sangathamizhan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.