இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளத்திலும், இலங்கையிலும், அரசு அமைக்கும் இலக்குடன் பாஜக உள்ளது என்ற திரிபுரா பாஜகவைச் சேர்ந்த முதல்வர் பிப்லாப் குமார் தேபின் கருத்திற்கு எதிராக நேபாள அரசின் சார்பாக முறையான ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டுள்ளதாக நேபாள வெளியுறவு துறை அமைச்சர் பிரதீப் கியாவாலி குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 13-ம் தேதி, மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஒன்றில் திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் பேசினார்.
அப்போது, இந்தியாவின் எல்லா மாநிலங்களையும் வென்ற பிறகு, அண்டை நாடுகளிலும் கட்சியை அமைத்து, அந்நாடுகளிலும் அரசாங்கம் அமைக்க பாஜக விரும்புகிறது என்று அவர் கூறினார்.
” இலங்கையிலும் நேபாளத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும் ” – திரிபுரா முதல்வர் பேச்சு
பிப்லாப் குமார் தேப்பின் இக்கருத்து குறித்த செய்தியை பகிர்ந்திருந்த ட்விட்டர் பயனர் ஒருவருக்கு பதிலளித்த நேபாள வெளியுறவு துறை அமைச்சர் பிரதீப் கியாவாலி, “கவனத்தில் கொள்ளப்பட்டது. ஏற்கனவே இதற்கு முறையான ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டுவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.
Noted. Formal objection has been already conveyed.
— Pradeep Gyawali (@PradeepgyawaliK) February 16, 2021
இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் நேபாள மற்றும் பூட்டானுக்கான இணைச் செயலாளர் அரிந்தம் பாக்சியை தொலைபேசியில் அழைத்த நேபாள நாட்டு தூதரக அதிகாரி நிலம்பர் ஆச்சார்யா, நேபாள அரசின் சார்பாக அக்கருத்திற்கு ஆட்சேபணை தெரிவித்துள்ளார் என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.