Aran Sei

வீழ்ச்சியடைந்து வரும் நேருவின் இந்தியா – சிங்கப்பூர் பிரதமர் பிரதமர் லீ சியென் லூங்

“நேருவின் இந்தியா” இன்றுவரை வீழ்ச்சியடைந்து வருகிறது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பாலியல் வன்புணர்வு, கொலை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) ) இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங்கிடம் இந்தியாவைப் பற்றிய சிங்கப்பூர் பிரதமரின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கூறியுள்ளது.

பிப்பிரவரி 15 அன்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்கள் பொய் சொன்னதாகக் கூறி கூட்டப்பட்ட விவாதத்தில் சிங்கப்பூர் பிரதமர் இவ்வாறு பேசியுள்ளார்.

செங்கோட்டையில் காவிக் கொடி பறக்கும் – பாஜகவை எதிர்த்து கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்ளிருப்பு போராட்டம்

“நேருவின் இந்தியா” இன்றுவரை வீழ்ச்சியடைந்து வருகிறது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பாலியல் வன்புணர்வு, கொலை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது, அவற்றில் பல அரசியல் உள்நோக்கங்கள் கொண்டவை என்றாலும் கூட, என்று பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், சிங்கப்பூரும் அதே வழியில் செல்வதைத் தடுப்பது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் டேவிட் பென்-குரியன் ஆகியோர் தங்களது நாடுகளுக்கு சுதந்திரம் பெற உதவியதோடு, அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் தார்மீக விழுமியங்களை பெறவும் அனுமதித்தனர். அதனால் தான் வளரும் நாடுகளுக்கு அவர்கள் முன்னுதாரணமாக இருக்கிறார்கள் என்று சிங்கப்பூர் பிரதமர் புகழ்ந்தார்.

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம்: தமிழ்நாடு அரசையும் மக்களையும் அவமதிக்கும் செயல் – எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

2019 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 17வது மக்களவை உறுப்பினர்களில் 43% பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளும், 29% பேர் கொலை, பாலியல் வன்புணர்வு போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் கண்காணிப்பு சங்கத்தின் தரவுகள் கூறுகின்றது.

சிங்கப்பூர் பிரதமரின் கருத்துக்களை ஒட்டி, “பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நேருவை எப்போதும் இழிவுபடுத்துகிறார்” என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Source : The Hindu

வீழ்ச்சியடைந்து வரும் நேருவின் இந்தியா – சிங்கப்பூர் பிரதமர் பிரதமர் லீ சியென் லூங்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்