Aran Sei

எம்பிபிஎஸ்: கலந்தாய்வில் இடம் கிடைக்காத மாணவர்கள் என்ஆர்ஐ ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பம்

ளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ்) படிப்பிற்கான ஒதுக்கீட்டின் ஆரம்ப சுற்று கலந்தாய்வுகளில் தோற்ற மாணவர்கள் சிலர், காலியாக உள்ள என்ஆர்ஐ ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்தியா முழுதும் உள்ள மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியருக்கான (என்ஆர்ஐ) ஒதுக்கீடு என்ற பெயரில் குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடானது வெளிநாடு வாழ் இந்தியரான மாணவர்களுக்கு மட்டுமல்லாது, ஒரு மாணவரின் முழு கல்வி கட்டணச் செலவையும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் ஏற்க தயாராக இருக்கும் பட்சத்தில் அம்மாணவரும் இவ்வொதுக்கீட்டிற்கு தகுதியானவர் ஆகிறார்.

உதாரணமாக, அம்மாணவருக்கான கட்டணத்தை செலுத்தும் பொறுப்பை வெளிநாடு வாழ் உறவினரோ அல்லது நண்பரோ ஏற்றுக்கொண்டால், அம்மாணவர் என்ஆர்ஐ ஒதுக்கீட்டின்கீழ் வருவர்.

காலியாக உள்ள 8000 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் – நீட் கட்-ஆப்ஃபை 15% குறைக்க ஒன்றிய அரசு முடிவு

அவ்வகையில், என்ஆர்ஐ ஒதுக்கீட்டின்கீழ் சேரும் மாணவர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் கல்வி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (மார்ச் 26) ஒரே இரவில், நீட் தேர்வு தரவரிசையில் ஆறு இலக்கங்களில் (தரவரிசையில் பிந்தங்கி இருக்கும்) உள்ள 152 மாணவர்கள், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரால் தங்கள் கல்வி கட்டணம் செலுத்தப்படவுள்ளது என கூறி, அதை நிரூபிக்க, சம்பந்தப்பட்ட துணைத் தூதரகத்தின் சான்றிதழ் உட்பட ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி, ஏற்கனவே நீட் தேர்வு தரவரிசையில் 267வது இடத்தைப் பிடித்தவருக்கு இந்த வகையிலான ஒதுக்கீட்டில் இடம் ஒதுக்கியுள்ளது.

2021ஆம் ஆண்டிற்கான மருத்துவ படிப்பிற்கான இடத்தைப் பெற முடியாமல் போன மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு வாய்ப்பான அகில இந்திய மாப்-அப் சுற்றுக்கான பதிவு மார்ச் 10 அன்று தொடங்கியபோது, ​​பல இந்திய மாணவர்கள் என்ஆர்ஐ நிலைக்கு மாற விண்ணப்பித்திருந்தனர்.

உக்ரைனில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவரின் இறப்பிற்கு நீட் தேர்வே காரணம்: எச்.டி.குமாரசாமி குற்றச்சாட்டு

அதைத்தொடர்ந்து, அத்தகைய மாணவர்களுக்கு மார்ச் 11ஆம் தேதி மதியம் தொடங்கி மறுநாள் மாலை 6 மணி வரை அம்மாணவர்களின் குடியுரிமையை இந்தியர் என்பதில் இருந்து என்ஆர்ஐ ஆக மாற்றுவதற்கு மருத்துவ கலந்தாய்வு குழு அவகாசம் அளித்தது.

இருப்பினும், சேர்க்கை செயல்முறையின் கடைசி கட்டத்தில், இடத்தைப் பெறுவதற்கான மற்ற அனைத்து வாய்ப்புகளும் முடிந்துவிட்டதால், தங்கள் தேசியத்தை மாற்றுமாறு அம்மாணவர்கள் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு கடிதம் எழுதினர்.

“அதனாலேயே அம்மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்க வேண்டிய கட்டாயம் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு ஏற்பட்டது. 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் ஒரு மாணவர் எந்த நேரத்திலும் தனது குடியுரிமையை மாற்றிக்கொள்ளலாம்” என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் பிரவின் ஷிங்காரே கூறியுள்ளார்.

‘நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறேன்’ -முதல்வர் ஸ்டாலினிடம் உறுதியளித்த ஆளுநர்

என்ஆர்ஐ ஒதுக்கீட்டின்கீழ் வழங்கப்படும் இடங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் தொடங்கி ரூ.60 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்பவர்களை விட நான்கு தொடங்கி ஐந்து மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கடந்த வாரம் வரை, காலியாக இருந்த என்ஆர்ஐ ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு இப்போது திடீரென தேவை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Times Of India

எம்பிபிஎஸ்: கலந்தாய்வில் இடம் கிடைக்காத மாணவர்கள் என்ஆர்ஐ ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்