ஜூலை 17 அன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. அன்று கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடைகளை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் கழற்ற சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த மாணவிகளுக்கு மீண்டும் நீட் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 4 ஆம் தேதி தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு மாணவிகளுக்கு வழங்கப்படும். இதனை உறுதிப்படுத்தும் மின்னஞ்சலை மாணவிகளுக்கு தேசிய தேர்வு முகமை அனுப்பியுள்ளது.
கேரளம்: நீட் தேர்வு ஆடை விவகாரம்: ஐந்து பேரை கைது செய்த காவல்துறை
தேசிய தேர்வு முகமையின் ஆடைக் குறியீடு உள்ளாடைகளை அகற்ற பரிந்துரைக்கவில்லை. அப்படியிருக்க குறைந்தபட்சம் 90 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பு தங்கள் உள்ளாடைகளை அகற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், அவற்றை ஸ்டோர் ரூமில் வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும்” தேர்வு எழுத வந்த ஒரு மாணவியின் தந்தை தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நீட் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 354 (பெண்ணின் மானத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பெண்ணைத் தாக்குதல்) மற்றும் 509 (ஒரு பெண்ணின் மானத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் வார்த்தை, சைகை அல்லது செயல்) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் நீட் தேர்வு மையத்தில் இருந்த இரண்டு கல்லூரி ஊழியர்களும், தேர்வு மையத்தின் பாதுகாப்பு பணியிலிருந்த மூன்று பேரும் அடங்குவர். குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டது.
தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவை இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில், இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை ஒரு உண்மை கண்டறியும் குழுவை அமைத்து குற்றச்சாட்டுகளை விசாரித்து நான்கு வாரங்களில் அதன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
Source : india today
செருப்பு வீச திட்டமிட்ட அண்ணாமலை | PTR palanivel thiyagarajan அடியில ஆடிப்போன பாஜக | Aransei Roast
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.