Aran Sei

‘நீட் தேர்வும் தேசியக் கல்விக் கொள்கையும் சரியானது’: மகாத்மா காந்தியைப் போன்றவர் மோடி – பாரிவேந்தர் எம்.பி புகழாரம்

தேசப்பற்றிலும் நாட்டின் முன்னேற்றத்திலும் பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தி போன்றவர் என்று இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தார் தெரிவித்துள்ளார்.

திருச்சி புத்தூர் பகுதியில் பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் புதிய தலைமை அலுவலகத்தை,  அச்சங்கத்தின் நிறுவனத் தலைவரும், பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் பாரிவேந்தர் திறந்து வைத்தார். இந்த விழாவில் பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் சத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து, பாரிவேந்தர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “மகாத்மா காந்தியை போன்றவர் இந்திய பிரதமர் மோடி. நாட்டின் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் உழைக்கிறார். அவருக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ச்சியாக தவறான தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் விரைவில் மோடி குறித்து புரிந்து கொள்வார்கள். அவரை நேசிப்பார்கள்; ஏற்றுக் கொள்வார்கள்.

மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் – இயக்குநர் பாக்யராஜ்

இந்தியாவின் பெருமையை பாதுகாக்க, நாட்டுப்பற்றுக் கொண்டு, நாட்டுக்காக உழைத்து வரும் பெருமகன் மோடி. இதே தமிழகம், மோடியை புகழ்ந்து பாராட்டும் காலம் விரைவில் வரும். அது வெகு தொலைவில் இல்லை. போட்டித்தேர்வை எதிர்கொள்ள அடிப்படை கல்வி வலுவாக இருக்க வேண்டும். அதற்கான தகுதியை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மோடி – அம்பேத்கர் ஒப்பீடு பற்றிய கருத்தை இளையராஜா திரும்பப் பெறமாட்டார் – கங்கை அமரன் தகவல்

சற்றுக் கடினமாக இருந்தாலும் கூட, நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை சரியானது. அதில் இருந்து ஒன்றிரண்டை எடுத்து போட்டு உருவாக்கும் மாநில கல்விக் கொள்கை தேவையற்றது.  மருத்துவக் கல்வி உட்பட விண்ணப்பங்கள் அதிகமாக வரும் போது போட்டி தேர்வு மட்டுமே சமூக நீதியை பாதுகாக்கும்” என்று இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான தெரிவித்துள்ளார்.

Source: News 18 Tamilnadu

பிரதமர் மோடியை புகழ்ந்த இயக்குநர் பாக்யராஜ் நடந்தது என்ன? விளக்குகிறார் ராஜீவ் காந்தி

‘நீட் தேர்வும் தேசியக் கல்விக் கொள்கையும் சரியானது’: மகாத்மா காந்தியைப் போன்றவர் மோடி – பாரிவேந்தர் எம்.பி புகழாரம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்