Aran Sei

ராமர் கோவிலுக்கு காங்கிரஸ் நிதி திரட்டல் – மணிஷ் திவாரி கடும் எதிர்ப்பு

ram-temple

ராமர் கோயில் கட்ட நிதி திரட்டும் பிரச்சாரத்தைக் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு தொடங்கியிருப்பது குறித்து, கட்சிக்குள் நேர்மையான மற்றும் கருத்தியல் ரீதியான கலந்துரையாடல் அவசியமாக இருப்பதை உணர்த்துகிறது எனக், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிஷ் திவாரி கூறியுள்ளார்.

ராமர் கோயில் கட்ட நிதி திரட்டுவதற்காக, காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய  மாணவர் சங்கத்தின் ராஜஸ்தான் பிரிவு மேற்கொண்டு இருக்கு பிரச்சாரம் தொடர்பாக வெளியான செய்தியை, தனது ட்விட்டர் பக்கத்தில் மணிஷ் திவாரி பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் ”ராமர் கோயில் கட்ட நிதி திரட்ட,  இந்திய தேசிய மாணவர் சங்கம் மேற்கொள்ளும் பிரச்சாரம், முக்கிய கருத்தியல்கள் தொடர்பாகக் காங்கிரஸ் கட்சிக்குள்   ஒரு நேர்மையான மற்றும் கருத்தியல் விவாதம் தேவை என்பதை மீண்டும் அடிக்கோடிட்டு காட்டுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராமரை விமர்சித்த எழுத்தாளர் கே.எஸ்.பகவான்: மைவீசி தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் மீரா ராகவேந்திரா

இதனிடையே, இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைவர் நீரஜ் குண்டன், ”ராமர் கோயில் கட்ட எந்த விதமான நன்கொடைகளையும் சேகரிக்க, நாங்கள் எந்தவொரு தேசிய பிரச்சாரத்தையும் நடத்தவில்லை” எனக் கூறியதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

ராமர் கோயில் என்ற பெயரில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் செய்துவரும் கொள்ளையை அம்பலப்படுத்தும் ஒரு அடையாள எதிர்ப்பாகவே, இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் ராஜஸ்தான் பிரிவு பிரச்சாரம் மேற்கொள்வதாக அவர் தெரிவித்ததாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரின் ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள கல்லூரியில், “ராமரின் பெயரில் ஒரு ரூபாய்” என்ற பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அம்மாநில இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைவர் அபிஷேக் சவுத்ரி, ராமர் கோயில் பெயரில் பாஜகவும், ஏபிவிபியும் கொள்ளையடிக்கின்றனர் என்று குற்றம்சாட்டியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த விவசாயி மீது போர்த்தப்பட்ட தேசியக் கொடி – மனைவி மீது தேசியக்கொடியை அவமதித்ததாக வழக்கு

”எங்களின் இந்தப் பிரச்சாரத்தின் மூலம், பாஜக மற்றும் ஏபிவிபியின் (ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பு) நடவடிக்கைகளை எதிர்க்கிறோம். ஏனென்றால், ராமர் கோயில் அனைத்து மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை வைத்து மக்களிடமிருந்து லட்சங்கள் மற்றும் கோடிகளில் பணம் பெறுவது தவறானது” என இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ரமேஷ் பைதி கூறியதாக என்டிடிவி குறிப்பிட்டுள்ளது.

இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் எந்த நடவடிக்கையும் தனக்கு தெரியாது என்றும், நிதிக்காகச் சிலர் தன்னை அணுகியதாகவும், ஆனால் நான் நிதியளிக்க மறுத்துவிட்டேன் எனக் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொருளாளர், பவன் பன்சால் தெரிவித்துள்ளதாக என்டிடிவி கூறியுள்ளது.

ராமர் கோவிலுக்கு காங்கிரஸ் நிதி திரட்டல் – மணிஷ் திவாரி கடும் எதிர்ப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்