கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியார் பிராங்கோ மூலக்கல் விடுதலை செய்யப்பட்டதற்கு, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக உள்ளவர் பிராங்கோ மூலக்கல். இவர்மீது கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, பிராங்கோ மூலக்கல்லை கைது செய்யக்கோரி கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2018ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி, பாதிரியார் பிராங்கோ முலக்கல் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், பிராங்கோ மூல்லக்கல் பிணையில் விடுதலையானார். அவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு கோட்டயத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று(ஜனவரி 14), இவ்வழக்கு கோட்டயம் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது, பாதிரியார் பிராங்கோ முலக்கல் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பு தவறியதாக சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம், பிராங்கோ மூலக்கலை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
இவ்வுத்தரவிற்கு அதிருப்தி தெரிவித்துள்ளதோடு, கன்னியாஸ்திரிக்கு தனது ஆதரவையும் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா அளித்துள்ளார்.
இது தொடர்பாக, ரேகா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், கேரளா கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
Shocked at the judgment of Kerala Addl. dist and session court. The Victim Nun must go to high court . @ncwIndia is with her in this fight for justice.
Bishop Franco Mulakkal, Accused Of Nun's Rape In Kerala, Acquitted https://t.co/Rkhhv9zKaw— Rekha Sharma (@sharmarekha) January 14, 2022
பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் நீதிக்கான இந்த போராட்டத்தில் தேசிய மகளிர் ஆணைய கன்னியாஸ்திரியுடன் துணை நிற்கும் என்றும் ரேகா சர்மா உறுதியளித்துள்ளார்.
ரேகா ஷர்மா தனது ட்வீட்டுடன், பிராங்கோ மூலக்கலின் விடுதலையை கூறும் செய்தி துணுக்கையும் இணைத்துள்ளார்.
Source: The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.