2004-05 ஆண்டு முதல் 2020-21 ஆண்டு வரை தேசிய கட்சிகளுக்கு அறியப்படாத ஆதாரங்களிலிருந்து ரூ.15,077.97 கோடிக்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
2020-21 ஆம் ஆண்டில் மட்டும் அறியப்படாத ஆதாரங்களிலிருந்து தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு ரூ.690.67 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது.
இதற்காக 8 தேசிய காட்சிகள் மற்றும் 27 மாநில கட்சிகளின் நன்கொடைகளை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ஆய்வு செய்தது.
2020-2021 இல் ரூ.752 கோடி வருமானத்துடன் பாஜக முதலிடம் : ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்
பாஜக, இந்திய தேசிய காங்கிரஸ், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய 8 தேசிய கட்சிகளின் நன்கொடைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அதே போல், திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, ஆம் ஆத்மி, அசாம் கண பரிசத், அனைத்திந்திய பார்வார்டு பிளாக் கட்சி, ஏஐஎம்ஐஎம், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, பிஜு ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்), கோவா பார்வார்டு கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, கேரள காங்கிரஸ், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி, நாகா மக்கள் முன்னணி, ராஷ்ட்ரீய லோக் தள், சிரோமணி அகாலி தளம், சிக்கிம் சனநாயக முன்னணி, சிவசேனா, தெலுங்கு தேசம் கட்சி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்.எஸ்.ஆர்-காங்கிரஸ் கட்சி ஆகிய மாநில கட்சிகளின் நன்கொடைகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
கார்ப்பரேட்களிடமிருந்து 720 கோடியை நன்கொடையாக பெற்ற பாஜக -ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்
2004-05 மற்றும் 2020-21 நிதியாண்டுக்கு இடையில், தேசிய கட்சிகள் அறியப்படாத ஆதாரங்களிலிருந்து ரூ.15,077.97 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி அறிக்கைகள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட நன்கொடை அறிக்கைகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட பகுப்பாய்வில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் கண்டறிந்துள்ளது.
“2020-21 நிதியாண்டில், 8 தேசிய அரசியல் கட்சிகளுக்கு அறியப்படாத ஆதாரங்களிலிருந்து ரூ.426.74 கோடியும், 27 மாநில கட்சிகளுக்கு அறியப்படாத ஆதாரங்களிலிருந்து ரூ.263.928 கோடியும் நன்கொடைகள் கிடைத்துள்ளது.
2020-21 நிதியாண்டில் தேசிய கட்சிகளுக்கு ரூ.426.742 கோடி நன்கொடை அறியப்படாத ஆதாரங்களிலிருந்து கிடைத்துள்ளது. இதில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு அறியப்படாத ஆதாரங்களிலிருந்து ரூ .178.782 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. இது அந்த நிதியாண்டில், தேசிய கட்சிகளுக்கு அறியப்படாத ஆதாரங்களிலிருந்து கிடைத்த மொத்த நன்கொடைகளில் 41.89 விழுக்காடு ஆகும்.
அதே நிதியாண்டில், பாஜகவிற்கு அறியப்படாத ஆதாரங்களிலிருந்து ரூ.100.502 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.
2020-21 நிதியாண்டில் ஒய்.எஸ்.ஆர்-காங்கிரஸ் கட்சிக்கு ரூ.96.2507 கோடி, திமுகவிற்கு ரூ.80.02 கோடி, பிஜு ஜனதா தளம் கட்சிக்கு ரூ.67 கோடி, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவிற்கு ரூ.5.773 கோடி, ஆம் ஆத்மி கட்சி ரூ.5.4 கோடி நன்கொடை அறியப்படாத ஆதாரங்களிலிருந்து கிடைத்துள்ளது.
Source : the hindu
செருப்பு வீச திட்டமிட்ட அண்ணாமலை | PTR palanivel thiyagarajan அடியில ஆடிப்போன பாஜக | Aransei Roast
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.