தேசிய பணமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) நிறுவனத்திற்கு சொந்தமான 10,000 மொபைல் டவர்களை விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 10,000 மொபைல் டவர்களை விற்பதன் வாயிலாக, ஒன்றிய அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் நாடு முழுவதும் 68,000 தொலைத்தொடர்பு (மொபைல்) டவர்கள் உள்ளன. அதில் 10,000 டவர்களை முதல் கட்டமாக விற்பனை செய்யப்பட உள்ளது.
குறிப்பிட்ட 10,000 மொபைல் டவர்களும், ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏனெனில், தேசிய பணமாக்குதல் திட்டத்தின் (National Monetisation Pipeline) கீழ், பி.எஸ்.என்.எல் -க்கு சொந்தமான 13,567 மொபைல் டவர்கள் வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் விற்கப்பட உள்ளது. அதாவது முதற்கட்டமாக விற்பனை செய்யப்பட உள்ள 10,000 டவர்களை தொடர்ந்து கூடுதலாக 3,567 மொபைல் டவர்களும் விரைவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் டவர்களை மட்டுமின்றி, மும்பை மற்றும் டெல்லியில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் MTNL-க்கு சொந்தமான 1350 தொலைத்தொடர்பு டவர்களும் கூட விற்பனை செய்யப்பட உள்ளது.
Source : economictimes
Kallakurichi Sakthi School management in girl student issue | Gowthama sanna | Ravikumar | Shanthi
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.