Aran Sei

பாஸ்டேக் முறையைக் கட்டாயமாக்கியது அடிப்படை உரிமைக்கு எதிரானது இல்லை – மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பதில்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தைச் செலுத்த பாஸ்டேக் முறையைக் கட்டாயமாக்கியது அடிப்படை உரிமைக்கு எதிரானது இல்லை மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பாஸ்டேக் நடைமுறை சாமானியர்களும் அணுகும் வகையில் இருக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சுங்கச் சாவடிகளில் செல்லும் வாகனங்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தைப் பாஸ்டேக் முறையில் செலுத்துவதை மத்திய அரசு கட்டாயமாக்கி அறிவித்ததை எதிர்த்து மும்பை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் காத்திருப்பதையும், நேர விரயத்தை குறைக்கவும் பாஸ்டேக் முறையை மத்திய அரசு கட்டாயமாக்கியது.

பெரியாரின் பெயரை நீக்கிய நெடுஞ்சாலைத்துறை: மதவெறி கூட்டத்தின் கால்பணிகிறதா அதிமுக – ஸ்டாலின் கேள்வி

இந்நிலையில், இதற்கு எதிராக ஏப்ரல் 6 அன்று மும்பை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவின் மீத விசாரணையின்போது, பாஸ்டேக் கட்டணமுறை திடீரென நடைமுறைப்படுத்தவில்லை, மோட்டார் வாகன சட்டத்தில் 2017 இல் கொண்டுவந்த திருத்தத்தின் படி டிசம்பர் 1 பிறகு வாங்கிய வாகனங்களுக்குப் பாஸ்டேக் முறையை அறிமுகப்படுத்தியதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக  தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சட்ட திருத்தத்தை நவம்பர் 2020 ஆம் ஆண்டு அனைத்து வாகனங்களுக்கும் கட்டயமாக்கி திருத்தம் கொண்டுவந்ததாகவும் அதுவே ஜனவரி 1 2021 இல் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

’விவசாயிகளின் ட்ராக்டர் பேரணிக்கு இன்று ட்ரைலர்’ – டெல்லி நெடுஞ்சாலைகளில் குவிந்த விவசாயிகள்

மேலும், பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது தேசிய நெடுஞ்சாலை கட்டணம் விதி 2008 ன் கீழ் விதிக்கப்படுவதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஸ்டேக் முறையைக் கட்டாயமாக்கியது அடிப்படை உரிமைக்கு எதிரானது இல்லை –  மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பதில்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்