Aran Sei

அரசியல் விவகாரங்கள் குறித்து மூன்று கான்கள் பேசினால், அவர்கள் அதிகம் இழக்க நேரிடும் – பாலிவுட் திரைக்கலைஞர் நஸ்ருதீன் ஷா கருத்து

Credit: The Indian Express

ரசியல் விவகாரங்கள்குறித்து சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் ஆகியோர் பேசினால் அவர்கள் அதிகம் இழக்க நேரிடும் என்று பாலிவுட் திரைக்கலைஞர் நஸ்ருதீன் ஷா தெரிவித்துள்ளார்.

என்டிடிவி தொலைக்காட்சிக்கு அவர் நேர்காணல் அளித்தபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முஹம்மது நபிகள்குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்த கருத்திற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய கிழக்கு நாடுகள், அந்த நாட்டிற்கான இந்திய தூதர்களை அழைத்து அவர்களது கண்டனங்களை பதிவு செய்தன. கருத்து தொடர்பாக இந்திய அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என்று கத்தார் கோரியிருந்தது.

’தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலமும் வெகுதொலைவில் இல்லை’: திரைக்கலைஞர் நசிருதீன் ஷா கருத்து

இந்நிலையில், நபிகுறித்து கருத்து தெரிவித்தவர்களை கட்சியை விட்டு நீக்கி பாஜக உத்தரவிட்டிருந்தது. மேலும், அவர்கள் விளிம்புநிலை மனிதர்கள் என்றும், அவர்களின் கருத்து கட்சிகளின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை என்று பாஜக தெரிவித்திருந்தது.

கான்களைப் பற்றி பேசிய நஸ்ருதீன் ஷா, “அவர்களுக்காக என்னால் பேச முடியாது. அவர்கள் இருக்கும் நிலையில், நான் இல்லை. அவர்கள் அதிக ஆபத்திற்கு ஆளாக நேரிடும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், பின்னர் அதைப் பற்றி அவர்களின் சொந்த மனசாட்சிக்கு எவ்வாறு விளக்குகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் இழக்க வேண்டிய அளவுக்கு அதிகமாக இருக்கும் நிலையில் அவர்கள் இருக்கிறர்கள் என்று நான் நினைக்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: பிரதமர் தலையிட்டு விஷம் பரவுவதை தடுக்க வேண்டும் – திரைக்கலைஞர் நசிருதீன் ஷா வேண்டுகோள்

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் கைதுகுறித்து பேசிய அவர், ”ஷாருக்கானுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதை அவர் எதிர்கொண்ட கண்ணியம் பாராட்டுக்குரியது. அது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அவர் அமைதியாக தான் இருந்தார். அவர் செய்தது எல்லாம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தும் மம்தா பானர்ஜியை பாராட்டியது மட்டுமே. எந்தவொரு அறிக்கை வெளியிடும் நபர்மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடுத்தது நானாக கூட இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால், அவர்களால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாது.

தேசியவாதம் குறித்த திரைப்படங்கள் அதிகரித்து வருவது குறித்து பேசிய அவர், “அவர்கள் வெற்றிக்கு பக்கத்தில் இருக்க விரும்புகிறார்கள். தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம், காஷ்மீர் இந்துக்களின் துன்பம் குறித்து கற்பனையாக பதிவு செய்திருந்தது. அதை அரசாங்கம் ஊக்குவிக்கிறது”என்று  பாலிவுட் திரைக்கலைஞர் நஸ்ருதீன் ஷா கூறியுள்ளார்.

Source: The Indian Express

யாரை மிரட்டுகிறார் ஜக்கி கம்பி எண்றதுதான் பாக்கி | Surya Xavier Interview | Aransei

அரசியல் விவகாரங்கள் குறித்து மூன்று கான்கள் பேசினால், அவர்கள் அதிகம் இழக்க நேரிடும் – பாலிவுட் திரைக்கலைஞர் நஸ்ருதீன் ஷா கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்