Aran Sei

புதுச்சேரி நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி அரசு தோல்வி – காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவை ராஜினாமா

புதுச்சேர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க முடியாததால், ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, முதல்வர் நாராணசாமி பதவியை, ராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக, பொதுப்பணி அமைச்சராக இருந்த நமச்சிவாயம், ஊசுடு தொகுதி (தனி) சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.கவில் இணைந்தனர்.

அதைத்தொடர்ந்து, ஏனாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சுகாதாரத்துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ், நெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினரான ஜான்குமார் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கி தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால், நாராணசாமி தலைமையிலான அரசுக் நெருக்கடி ஏற்றபட்டது.

” லவ் ஜிகாதை தடுக்காமல் தூங்கும் கேரள அரசு ” : யோகி ஆதித்யநாத்

இந்நிலையில், பிப்ரவரி 17 ஆம் தேதி, என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர், துணைநிலை ஆளுநர் தமிழிசை  சௌந்தரராஜனை சந்தித்து, புதுச்சேரியில் ஆளும் கூட்டணி  அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதாகவும், ஆகவே பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

எதிர்கட்சியினர் கோரிக்கையை ஏற்ற துணைநிலை ஆளுநர்,  இன்று (பிப்ரவரி 22) நாராயணசாமி அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், நேற்று (பிப்ரவரி 21) சட்டமன்ற அவைத்தலைவர் சிவக்கொழுந்தை சந்தித்து, தங்களது ராஜினாமா கடித்தத்தை அளித்தனர்.

“போராட்டம் தொடர்கிறது, தீவிரமடையும் ” – விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

கூட்டணி அரசின் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருந்த நிலையில், இன்று கூடிய, புதுசை சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். அப்போது பேசிய அவர், மத்திய பாஜக மற்றும் புதுச்சேரி எதிர்கட்சிகளின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில், நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க சபாநாயகர் அனுமதியளித்தார். வாக்கெடுப்பின் முடிவில், அரசுக்கு எதிராக 14 வாக்குகளும், அரசுக்கு ஆதரவாக 12 வாக்குகளும் பதிவானதால், நம்பிக்கை தீர்மானம் தோல்வியடைந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.

இதையடுத்து, நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை துணைநிலை ஆளுநரைச் சந்தித்து, தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்தது. அவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி அரசு தோல்வி –  காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவை ராஜினாமா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்