Aran Sei

ஆர்எஸ்எஸ் மீது வரிமானவரித்துறையிடம் புகாரளித்த சமூக செயற்பாட்டாளர் – வரி ஏய்ப்பு செய்துள்ளதா ஆர்எஸ்எஸ்?

ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நிதி பரிவர்தனைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை இயக்குநரகத்திடமும் வருமான வரித்துறையிடமும் நாக்பூரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் புகார் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு, மே மாதம் 23 ஆம் தேதி அன்று, கொரோனா தொற்றுநோயின் முதல் அலையின்போது, ​​ஆர்எஸ்எஸ் அமைப்பானது மக்களுக்கு அளித்த பல்வேறு வகையான உதவிகள் குறித்து அவ்வமைப்பு ட்விட்டர் பக்கத்தில் சில தகவல்கள் பகிரப்பட்டிருந்தன. அத்தகவல்களைதான் சமூக செயற்பாட்டாளர் மோஹ்னிஷ் ஜபல்பூரே கையில் எடுத்துள்ளார்.

ஆர்எஸ்எஸ்ஸின் தகவல்களின்படி, ரேஷன் பொருட்கள் அடங்கிய 1.1 கோடி தொகுப்பு, 7.1 கோடி உணவுப் பொட்டலங்கள் மற்றும் 63 லட்சம் முககவசங்களை வழங்கியிருக்கிறது. ஜனவரி 27 ஆம் தேதி, கொரோனாவின் முதல் தொற்று இந்தியாலில் பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, மார்ச் 24 ஆம் தேதி, நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து, மே 20 ஆம் தேதி வரை இந்த உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக அத்தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆர்எஸ்எஸ் “விஷ்வ குரு” – இந்தியாவுக்கும் உலகத்துக்கும் என்ன கதி? : ஏ ஜி நூரானி

இவற்றுக்கு அதிக அளவிலான நிதி தேவைப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ள மோஹ்னிஷ் ஜபல்பூரே, அந்த நிதி எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, ஆர்எஸ்எஸ் மீது நாக்பூர் தொண்டு நிறுவனங்களின் ஆணையரிடமும் மகாராஷ்டிரா முதலமைச்சரின் செயலகத்திலும் அவர் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரை தொண்டு நிறுவனங்களின் ஆணையர்  ஏற்க மறுத்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பானது சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860-ல் அல்லது மகாராஷ்டிரா பொது அறக்கட்டளைகள் சட்டத்தின் கீழ் ஒரு அமைப்பாக பதிவு செய்யப்படவில்லை என்றும் ஆகவே இது ஆணையரின் அதிகார வரம்பிற்குட்பட்டதல்ல என்றும் கூறியுள்ளதாக ‘நாக்பூர் டுடே’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்துதான், அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையிடம் மோஹ்னிஷ் ஜபல்பூரே புகார் அளித்துள்ளார். “பதிவுசெய்யப்படாத அமைப்பாகவும் வங்கிக் கணக்கு இல்லாத அமைப்பாகவும் உள்ள ஆர்எஸ்எஸ், மார்ச் மாதம் தொடங்கி மே மாதத்திற்கு இடையேயான சிறுகாலத்தில், இத்தனை நிவாரணங்களை மேற்கொள்வதற்கு தேவையான நிதியை எப்படி பெற முடிந்தது?” என்று அப்புகாரில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘வெறுப்பின் உருவம்’ – ஆர்எஸ்எஸ் மீதான தடையும், சர்தார் வல்லபாய் பட்டேலும்

மேலும், இப்புகாரில், “இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? இந்தத் தகவல்கள் உண்மையா அல்லது விளம்பரத்திற்கு சொல்லப்பட்டதா? சட்டவிரோதமாக பெறப்பட்ட பணமென்றால் அது வருமான வரி ஏய்ப்பையே காட்டுகிறது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளதாக ‘நாக்பூர் டுடே’ குறிப்பிட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த உறுப்பினர் அரவிந்த் குக்டே, “எங்களுக்கு முறையாக சம்மன் அளிக்கப்பட்டால், அதற்குரிய பதிலளிப்போம்.” என்று கூறியுள்ளார்.

Source: The Wire, Nagpur Today,

ஆர்எஸ்எஸ் மீது வரிமானவரித்துறையிடம் புகாரளித்த சமூக செயற்பாட்டாளர் – வரி ஏய்ப்பு செய்துள்ளதா ஆர்எஸ்எஸ்?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்