நாகாலாந்தில் பாதுகாப்பு படையினரால் பொது மக்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் ராணுவ விதிகள் பின்பற்றபடவில்லை என்று கூறி 30 ராணுவ வீரர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்துள்ளது.
நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டம் ஓடிங் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றிவிட்டு தொழிலாளர்கள் வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படையினர், சுரங்கத்தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் என தவறுதலாக நினைத்துத் தாக்குதல் நடத்தினர்.
இதில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. அதில், 30 ராணுவ வீரர்கள் பெயரை கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்து உள்ளது.
பாதுகாப்பு சிறப்பு படை விதிகளைப் பின்பற்றவில்லை என்றும் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை(மக்கள்) உடநடியாக கொல்ல வேண்டும் என்கிற நோக்கம் இருந்தாக நாகாலாந்து காவல்துறை இயக்குநர் டி.ஜே.லோங்குமர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: IndiaToday
மீண்டும் இஸ்லாமியர்களை வம்புக்கிழுக்கும் Amit Shah | Piyush Manush | Nupur Sharma | Prophet Muhammad
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.