Aran Sei

மர்மமான முறையில் உயிரிழந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர் – உரிய விசாரணை கோரி போராட இந்திய மாணவர் சங்கம் முடிவு

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட அனிஷ் கான் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் (எஸ்எஃப்ஐ) தெரிவித்துள்ளது.

வெள்ளிகிழமை இரவு காவல்துறை சீருடையுடன் கானின் வீட்டிற்குள் நுழைந்த நபர்கள், கானை அவரது வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்து சென்று கீழே தள்ளியது தான் உயிரிழப்பிற்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

காவல்துறையைச் சேர்ந்த யாரும் கானின் வீட்டிற்கு செல்லவில்லை என தெரிவித்துள்ள காவல்துறையினர், கான் அவரது வீட்டின் அருகில் இறந்து கிடந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு உள்ளூர் பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் காரணமாக இருக்கலாம் என  காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த குற்றச்சாட்டை மறுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், இது சம்பவத்திற்கு பின்னால் ‘ஆழமான சதி’ இருக்கிறது என்றும், அது மேற்கு வங்கத்திற்கு வெளியே திட்டமிடப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா அலியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த 500 மாணவர்கள் நடத்திய மெழுகுவர்த்தி பேரணியின் போது, காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் முதன்மையாக ஈடுபட்டவரும் கொரோனா பெருந்தொற்றின் போது ஏழை எளிய மக்களுக்கு உதவி புரிந்தவருமான அனிஷ் கானின் மரணத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு, கடுமையான தண்டனை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கானை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அலியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மாநில முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர் சுபஜித் சர்கார் தெரிவித்துள்ளார்.

கானின் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொன்ன இந்திய மாணவர் சங்கத்தின் தேசிய இணை செயலாளர் தீப்ஷிதா தார் மற்றும் மாநில தலைவர் பிரதிகூர் ரஹ்மான் தலைமையிலான இந்திய மாணவர் சங்க பிரதிநிதிகள், “அவர் சில காலமாகவே குறிவைக்கப்பட்டு இருக்கிறார். உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்” என கூறியுள்ளனர்.

மர்மமான முறையில் உயிரிழந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர் – உரிய விசாரணை கோரி போராட இந்திய மாணவர் சங்கம் முடிவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்