Aran Sei

பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே எனது கடைசி போராட்டம் – மம்தா பானர்ஜி

2024இல் பாஜக ஆட்சியை அகற்றுவதே எனது கடைசி போராட்டம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடத்தி வருகிறது. 2011ஆம் ஆண்டு கம்யூனிஸ்டுகளின் ஆட்சியை வீழ்த்தி முதல் முறையாக முதலமைச்சரான மம்தா, அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல் அனைத்திலும் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் கடுமையான சவாலையும் மீறி தனிப் பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றி பெற்ற மம்தா ஆட்சியை தக்க வைத்த நிலையில், அவரை 2024ஆம் ஆண்டு பாஜகவுக்கு எதிராக களம் காண வைக்க மூன்றாம் அணி கட்சிகள் அவ்வப்போது குரல் கொடுத்து வருகின்றன.

இந்தியாவில் நீட் பயிற்சி பெற்ற மாணவர்கள் இருக்கிறார்களே தவிர மருத்துவர்கள் இல்லை – பேராசிரியர் கபீர் சர்தானா

திரிபுரா, கோவா போன்ற மாநிலங்களில் தனது கட்சியை விரிவுப்படுத்தும் செயல்களில் ஈடுபட்ட மம்தா, நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் தலைமையில் எதிர்க்கட்சிகளை திரட்டி பொது வேட்பாளரை அறிவித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கூட ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில், பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவதே எனது கடைசி போராட்டம் என மம்தா அறிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றின் நடவடிக்கைகளை கண்டித்து கொல்கத்தாவில் மம்தா தலைமையில் பேரணி  நடைபெற்றது. இதில் மம்தா பேசுகையில் கூறியதாவது, “2024 ஆம் ஆண்டில் ஒன்றியத்தில் இருந்து பாஜகவை அகற்றும் போராட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் முன்னின்று நடத்த வேண்டும். அமைப்புகளை வைத்து மிரட்ட நினைத்தால் பாஜகவுக்கு தக்க பதிலடி தரப்படும். யாராக இருந்தாலும் ஒரு நாள் தோல்வியை காண வேண்டும். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற தலைவர்கள் மிகப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று பின்னர் தோல்வியையும் சந்தித்துள்ளனர்.

கர்நாடகா: ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்த கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாஜகவிடம் தற்போது 300 எம்பிக்கள் இருக்கலாம். ஆனால், பிகார் மாநிலம் அவர்களை விட்டு சென்றுள்ளது. அதேபோல், மற்ற மாநிலங்களிலும் மாற்றம் நடைபெறும். இப்போது பாஜகவில் இருக்கும் தலைவர்கள் தேர்தலுக்குப் பின் இருக்க மாட்டார்கள்” என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

Madras HC Judgement on Kallakurichi Sakthi School Bail case – Pasumpon Pandian | Kallakurichi Case

பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே எனது கடைசி போராட்டம் – மம்தா பானர்ஜி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்