Aran Sei

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை வழிபடும் பாஜகவுக்கு இஸ்லாமியர்கள் ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள் – சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. இக்பால் முகமது

ஸ்லாமிய மதத்தினர் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் இக்பால் முகமது தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் சம்பால் தொகுதி சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர். இக்பால் முகமது நேற்று கூறுகையில், “உண்மையான இஸ்லாமிய மதத்தவர் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டார். ஏனென்றால், பாஜக மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) ஒருபோதும் இஸ்லாமிய மதத்தவராக இருக்க முடியாது. மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை வழிபடுபவர்களை இஸ்லாமிய மதத்தினர் ஒருபோதும் நம்பமாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பாஜகவின் ‘பி டீம்’ ஆக செயல்படுவதாகவும் சட்டமன்ற உறுப்பினர். இக்பால் குற்றம் சாட்டினார்.

Source : NDTV

இந்தி தெரியாது போடா…| இடியட் சங்கி சேஷாத்ரிக்கு வைச்ச ஆப்பு | Aransei Roast | Hindi | BJP

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை வழிபடும் பாஜகவுக்கு இஸ்லாமியர்கள் ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள் – சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. இக்பால் முகமது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்