இஸ்லாமியர்கள் தயாரிப்பதால் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றுவதைப் புறக்கணித்து காவிக்கொடியை ஏற்றுங்கள் என்று உத்தரப்பிரதேச மடத்தின் தலைவரான துறவி யத்தி நரசிங்காணந்த் தெரிவித்துள்ளார்.
காஜியாபாத்திப் மகாகால் தாஸ்னா மடத்தின் தலைவராக இருப்பவர் யத்தி நரசிங்காணந்த் சரஸ்வதி. தேசியக் கொடி ஏற்றுவது குறித்து அவருடைய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
அக்காணொளியில், “மேற்கு வங்கத்தில் உள்ள சலாவுத்தீன் என்கிற இஸ்லாமியர்தான் தேசியக்கொடி தயாரிப்பதற்கு டெண்டர் எடுத்துள்ளார். எனவே, வீடுதோறும் தேசியக்கொடி என்பதற்கு பதிலாக காவிக்கொடியை ஏற்றுங்கள். தேசியக்கொடிகளை தயாரிக்கும் மிகப்பெரிய ஒப்பந்தம் பெற்றிருப்பவர் மேற்கு வங்க மாநிலத்தின்.
நான் இந்துக்களிடம் கோருவது என்னவெனில், வீடுதோறும் தேசியக்கொடி நிகழ்ச்சியைப் புறக்கணியுங்கள். இதற்கு பதிலாக காவிக்கொடியை வீடுகளில் ஏற்றுங்கள்.தேசியக்கொடியை கண்டிப்பாக ஏற்ற விரும்புபவர்கள் தங்கள் வீடுகளில் பழைய தேசியக்கொடிகள் இருந்தால் அவற்றை ஏற்றுங்கள். தவிர, தற்போது இஸ்லாமியர்கள் தயாரிக்கப்பட்டதை ஏற்ற வேண்டாம்.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் இந்துக்களிடம் தேசியக்கொடிகளுக்கான விலையை பெற்று அந்தப் பணத்தில் இந்துக்களை கொல்ல சதி செய்யப்படும்” என உத்தரப்பிரதேச மடத்தின் தலைவரான துறவி யத்தி நரசிங்காணந்த் தெரிவித்துள்ளார்.
தேசியக்கொடி ஏற்றிய இளைஞர்கள் | ஜெயிலில் தள்ளிய ஆர்.எஸ்.எஸ் | Aadhavan Dheetchanya | RSS | BJP | Modi
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.