Aran Sei

‘ஹிஜாப் அணிந்த எங்களை வகுப்புக்கு அனுமதியுங்கள்’- கல்லூரி முதல்வரிடம் உரிமை கோரும் இஸ்லாமிய மாணவிகள்

ர்நாடகா மாநில உடுப்பி மாவட்டத்தில் மேலும் ஒரு கல்லூரி இஸ்லாமிய மாணவிகளை ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வர அனுமதி மறுத்துள்ளது.

அண்மையில், உடுப்பியில் உள்ள மகளிர் அரசு கல்லூரியைச் சேர்ந்த நான்கு இஸ்லாமிய மாணவிகளை ஹிஜாப் அணியாமல் வகுப்புகளுக்கு வருமாறு அக்கல்லூரி நிர்வாகம் உத்தவிட்டிருந்தது. இவ்வுத்தரவை எதிர்த்தது உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தின் குந்தாப்பூரில் உள்ள ஒரு பல்கலைக்கழக கல்லூரி மாணவிகள், ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்குமாறு கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை வைப்பதாக உள்ளது.

‘உடுப்பி அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை’ – இஸ்லாமிய மாணவிகள் உரிமைக்குரல்

தங்களின் தேர்வுகளுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளது என்றும் இப்போது ஹிஜாப் அணிவதற்கு கல்லூரி நிர்வாகம் ஏன் மறுப்பு தெரிவிக்கிறது என்றும் அம்மாணவிகள் முதல்வரிடம் கூறுகிறார்கள்.

நேற்று(பிப்பிரவரி 2), சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குச் சென்றதில் இருந்து பிரச்சினை தொடங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்துள்ளனர்.

குந்தாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஹாலடி ஸ்ரீனிவாஸ் ஷெட்டியுடன் கல்லூரி நிர்வாகம் நடத்திய கூட்டத்தில், மாணவிகள் ஹிஜாப் அணிய கூடாது என முடிவுக்கு வந்தனர். இருப்பினும், தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் மாணவிகளை கல்லூரிக்குள் நுழைய கல்லூரி தடை விதித்துள்ளது.

Source: NDTV

‘ஹிஜாப் அணிந்த எங்களை வகுப்புக்கு அனுமதியுங்கள்’- கல்லூரி முதல்வரிடம் உரிமை கோரும் இஸ்லாமிய மாணவிகள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்