Aran Sei

ஹிஜாப் அணியக் கோரும் இஸ்லாமிய மாணவிகள் கல்வியிலிருந்து விலக்கப்பட வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ பசங்கவுடா யத்னால் கருத்து

குப்புகளில் ஹிஜாப் அணியக் கோரும் இஸ்லாமிய மாணவிகள் கல்வியிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசங்கவுடா யத்னால் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் (சிறுபான்மையினர்) நீதிமன்றம் மற்றும் அரசியலமைப்பின் மீது மரியாதை செலுத்துவதில்லை. அவர்கள் எதிர்காலத்தை விரும்புவதுமில்லை. ஆகவே எதிர்காலத்தில் அவர்களுக்கு கல்வி வழங்கப்படக் கூடாது” என்று பசங்கவுடா யத்னால் தெரிவித்துள்ளார்.

நேற்று (மே 26) கர்நாடகாவில் உள்ள மங்களூரு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்குள் வந்ததாகக் கூறி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் ஹிஜாப் அணியக் கூடாது – கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ்

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும், வகுப்புகளில் நுழைவதற்கு முன்பு அவர்கள் தங்கள் ஹிஜாப்களை அகற்ற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைகளில் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்குமாறு துணை ஆணையரிடம் ஒரு மனுவைக் கொடுத்துள்ளனர்.

Source : india today

மேடையிலேயே சம்பவம் செய்த ஸ்டாலின் R Vijaya Sankar Interview

ஹிஜாப் அணியக் கோரும் இஸ்லாமிய மாணவிகள் கல்வியிலிருந்து விலக்கப்பட வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ பசங்கவுடா யத்னால் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்