Aran Sei

காஷ்மீர்: பண்டிட்கள் மீதான தொடர் தாக்குதல் – இஸ்லாமியத் தலைவர்கள், சிவில் உரிமைகள் அமைப்பு கண்டனம் 

Credit: The Wire

காஷ்மீரில் சிறுபான்மை சமூகத்தினரான பண்டிட்கள் தொடர்ந்து குறிவைத்து படுகொலைக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கின் முக்கிய மதத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிறுபான்மையினர் குறிப்பாக ஆசிரியர்கள் கொல்லப்படுவதற்கு ஜம்மு காஷ்மீர் அஞ்சுமான்-இ-ஷாரி ஷியானின் தலைவரும்  ஷியா பிரிவுத் தலைவருமான ஆகா சையத் ஹசன் மோசவி, அவரது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஸ்ரீநகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமிய தலைவர்கள் ஒரு கூட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றினர். அதில், “பன்முகத்தன்மை என்பது காஷ்மீர் சமூகத்தின் அடிப்படை மற்றும் அடிப்படை உண்மை. இந்த பன்முகத்தன்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இடமாறுதல் கோரிக்கையை ஏற்க மறுத்த ஒன்றிய அரசு – காஷ்மீர் பள்ளதாக்கை விட்டு வெளியேறும் பண்டிட்கள்

பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்படுவதை கண்டித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

”சுயநலத்தின் தீய திட்டங்களை முறியடிக்க சமூகங்களிடையே ஒற்றுமை வேண்டும்” என்று வலியுறுத்திய தலைவர்கள், இடைவெளிகளை நிரப்ப காஷ்மீர் முழுவதும் மதங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தனர்.

கூட்டத்தில் மிர்வாய்ஸ் உமர் ஃபருக்கை வீட்டுக் காவலில் இருந்து விரைவில் விடுவிக்கவும தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காஷ்மீர் பண்டிட்கள் மீதான குறிவைக்கப்பட்ட தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுங்கள் – ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை

சிறுபான்மை சமூகத்தினர் கொல்லப்படுவதை கோழைத்தனமான செயல் என்று கூறிய கிராண்ட் முஃப்தி நசீர்-உல்-இஸ்லாம், “இது போன்ற செயல்களை நாங்கள் கண்டிக்கின்றோம். ஏனெனில் இது சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மை சமூகங்களுக்கு இடையில் வெறுப்பை உருவாக்குகிறது. சகோதரத்துவத்தைப் பராமரிக்கவும், இந்த தீய திட்டங்களைத் தோற்கடிக்கவும் நான் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

அப்பாவி மக்கள் குறிவைத்து கொல்லப்படுவது உலகளாவிய மனித மதிப்புகள்மீதான தாக்குதல் என்று என்று காஷ்மீரில் உள்ள சிவில் சமூகம் தெரிவித்துள்ளது.

”இது போன்ற செயல்களை வன்மையாக கண்டிக்கின்றோம். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஊழியர்களின் பாதுகாப்பிற்கான முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறும் காஷ்மீரில் உள்ள அனைத்து மக்களுக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று பள்ளத்தாக்கை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னாள் அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய சிவில் சமூக அமைப்பான குடிமக்கள் குழு (ஜி.சி.சி) கூறியுள்ளது.

காஷ்மீர் பண்டிட்களை காலனிக்குள் அடைத்து வைத்திருப்பது தான் பாதுகாப்பா? – ஒன்றிய அரசுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் கேள்வி

அப்பாவி பொதுமக்களின் இரத்தக்களரியை “ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மனிதகுலத்திற்கு எதிரானது” என்று காஷ்மீரின் உயர்மட்ட வர்த்தகர்களின் அமைப்பான காஷ்மீர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (கே.சி.சி &ஐ) குறிப்பிட்டுள்ளது.

”இது காஷ்மீரியத்தின் அடிப்படை உணர்வு மற்றும் கருத்தாக்கத்திற்கு எதிரானது. இது காஷ்மீரிகளின் மதிப்பை மீண்டும் சீர்குலைத்துள்ளது மற்றும் கலாச்சார நெறிமுறைகளுக்கு எதிரானது” என்று கே.சி.சி.ஐ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

Source: The Hindu

உச்சகட்டத்தில் அதிமுக பாஜக மோதல்! கூட்டணி உடைகிறதா? Manoj Interview | Admk Vs Bjp | Sellur Raju ADMK

காஷ்மீர்: பண்டிட்கள் மீதான தொடர் தாக்குதல் – இஸ்லாமியத் தலைவர்கள், சிவில் உரிமைகள் அமைப்பு கண்டனம் 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்