பீகாரில் உள்ள ஒரு விசாரணை நீதிமன்றம் அனைத்து சாட்சிகளையும் விசாரிக்காமல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தது “மிகவும் வருந்தத்தக்கது”, “அதிர்ச்சி அளிக்கிறது” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்துள்ளது பாட்னா உயர் நீதிமன்றம். பின்னர், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டபோது உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.
அசாம் காவல் மரணம் – காவல் நிலையத்துக்கு தீ வைத்தவர்கள் இஸ்லாமியர்கள் எனக் குற்றஞ்சாட்டிய பாஜக
பீகாரில் இதுபோன்ற சம்பவம் நடப்பது மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பில் இருந்து எழும் மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு, பாட்னா உயர் நீதிமன்றம் ஜூலை 2018 யில் அளித்த தீர்ப்பில் தலையிட விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளது.
ஹிஜாப் அணிவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் – உலக குத்துச்சண்டை சாம்பியன் நிகத் ஜரீன்
உங்கள் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லையா? குறைந்தபட்சம், பீகார் போன்ற மாநிலங்களில் இப்படித்தான் நடக்கிறது என்பது என் மனசாட்சியை அதிர்ச்சியடையச் செய்கிறது. இது அதிர்ச்சியளிக்கிறது, தீர்ப்பு மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும்,” என்று நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார்.
பாட்னா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருப்தி அடைவதாகவும், பிரிவு 136ன் கீழ் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
Source: ndtv
கொல்லப்பட்ட மக்கள் குற்றவாளிகளா? Maruthaiyan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.